Monday, May 13, 2019

குருநாகல் முஸ்லிம்களே, விழிப்புடன் இருங்கள்

குருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்களை, வெறிபிடித்த பௌத்த சிங்கள இனவாதிகள், இலக்கு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 30 க்கும் மேற்பட்ட, முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டுள்ளன.

முப்படையினர் பார்த்திருக்கும் நிலையிலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலுமே குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிராக இந்த கொடூரச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இன்று திங்கட்கிழமை 13 ஆம் திகதி தாக்குதல் சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளபடியால்,  குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் மிக விழிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: