Monday, May 6, 2019

சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய நபர்கள் இருவர் கைது


தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது சகோதரரான மொஹமட் ரில்வான் ஆகியவரிகளின் நெருங்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் வவுணதீவு முகாம் அதிகாரிகளினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

2018 ஆம் ஆண்டு வெடிபொருள் தயாரிக்கும் போது சஹ்ரான் ஹசீம் மற்றும் மொஹமட் ரில்வான் ஆகியோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது குறித்த சந்தேகநபர்களினால் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

Author: verified_user

0 comments: