காங்கேயனோடை முஹியித்தீன் ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த புனித இப்தார் நோன்பு திறக்கும் வைபவம் மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.எம்.றஸீம் தலைமையில் இன்று மாலை பள்ளிவாயல் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று சிறப்பித்தார்.
இதன் போது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் "ஜனாதிபதி தலைமையில் நாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது மக்கள் அச்சமின்றி தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடலாம்" என குறிப்பிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்த்தூரி ஆராச்சி உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் என முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.
.
(ஊடகப்பிரிவு)
.





0 comments: