திருப்திகரமான வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படும் பலர், தமது செல்வம் பெருக வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு செல்வம் பெருக வேண்டுமாக இருந்தால், கட்டாயம் சில விஷயங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
செல்வச் செழிப்போடு வாழ, நாம் வாழும் வீட்டில் ஒருபோதும் துர்நாற்றம் வீசக்கூடாது. அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும் என கருதப்படுகின்றது.
செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், ஆபரணங்கள் என்பன சிதறிக் கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை பிறிதொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால்,செல்வம் பெருகும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும். அதே நேரம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் ''இல்லை, மாட்டேன்'' போன்ற அவச்சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிமுதல் இரவு 7 மணி வரை இதுபோன்ற வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
அத்துடன் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி, சுத்தம் செய்து அலசிவிட்டுவிட வேண்டும். அலசிய பின்னர், நமது வீட்டுப் பூஜையறையில், நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டிய பின்னர், தயிர் அல்லது தயிர் கலந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் அருந்தினால், செல்வம் பெருகுவதுடன், கோபமும் வராது.

0 comments: