Tuesday, May 7, 2019

நுவரெலியா பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி


நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வலியுறுத்தலுக்கமைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் 5 பிரதேச செயலகங்கள் உள்ளமை குறிப்பிடதக்கது.

Author: verified_user

0 comments: