Wednesday, May 22, 2019

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தாயாருக்கு ஏற்பட்ட விபரீதம்.. (காணொளி)


முதலாம் தரத்திற்கு தனது பிள்ளையை  இணைத்து கொள்ள முடியாது என்ற காரணத்தினால் பாடசாலை கட்டிட தொகுதியின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தாயார் ஒருவர் சுகயீமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


குறித்த பெண் வீரகெடிய ராஜபக்ஷ ஆரம்ப பாடசாலையினது கட்டிட தொகுதி கூரை மேல் ஏறி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையிலே சுகயீனமுற்ற நிலையில் தங்கல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



பாடசாலை அருகாமையில் வசிக்கும் குறித்த பெண் நேற்றைய தினம் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: