Wednesday, May 29, 2019

கெகிராவ மடாடுகம தௌஹீத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்கள் உடைக்கப்பட்ட சம்பவம் ..


கெகிராவ மடாடுகம பகுதியில்  தௌஹீத் பள்ளிவாயல் உள்ளூர் முஸ்லிம்கள் மற்றும் பிரதேச பிரதான பள்ளிவாயல் உறுப்பினர்களால்  உடைக்கப்பட்ட சம்பவம்  இன்று இடம்பெற்றுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் நூலகம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு நிதி உதவியில் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளிவாயலில் தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலையை அடுத்து இந்த பள்ளிவாயல் பிரதேசத்திற்கு அவசியமற்றதாக கருதுவதாக அங்குள்ள பள்ளிவாயல் நிருவாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



Author: verified_user

0 comments: