Tuesday, May 21, 2019

அமைச்சு பதவியிலிருந்து ரிஷாத் இராஜினாமா செய்ய வேண்டும்

அகில இலங்கை  மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் வணிக, கைத்­தொழில் அமைச்­ச­ரு­மான ரிஷாத் பதி­யுதீன் அமைச்சுப் பத­வியை  தற்­கா­லி­க­மாக இரா­ஜி­னாமா செய்­ய­வேண்டும் என ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின்  மூத்த உறுப்­பி­னர்கள் பலரும் கோரிக்கை விடுத்­துள்­ள­போ­திலும் அத்­த­கைய  கோரிக்­கை­யினை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிரா­க­ரித்­துள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 


அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு  எதி­ராக  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யினை எதி­ரணி சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­துள்­ளது. இந்த  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை பாரா­ளு­மன்ற  ஒழுங்கு   பத்­தி­ரத்தில் சேர்க்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்று  சபா­நா­யகர்  கரு ஜய­சூ­ரிய தலை­மையில் இடம்­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இவ்­வி­டயம் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தொடர்­பிலும் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. 

இந்த நிலையில்   சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை தனித்­த­னி­யா­கவும் சந்­தித்துப் பேசி­யுள்ளார்.  தற்­போ­தைய நிலையில்  அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியை தவிர்க்கும் வகையில்  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தனது அமைச்சுப் பத­வியை தற்­கா­லி­க­மாக இரா­ஜி­னாமா செய்தால் இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடியும் என்று ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் பலரும்   வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.   அமைச்­சர்­க­ளான ரவி கரு­ணா­நா­யக்க,  திலக் மாரப்­பன  ஆகியோர் முன்னர்  இரா­ஜி­னாமா செய்­ததைப் போன்று அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனும்  தற்­போ­தைய நிலையில் இரா­ஜி­னாமா செய்தால் நெருக்­க­டி­யினை தவிர்க்க முடியும் என்று இவர்கள்  கருத்து தெரி­வித்­துள்­ளனர். 
ஆனாலும் இந்த  நிலைப்­பாடு தொடர்பில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம்  தெரி­விக்­கப்­பட்ட போது  அதனை பிர­தமர்  நிரா­க­ரித்­துள்ளார்.  குண்­டுத்­தாக்­குதல் சம்­ப­வங்கள் தொடர்­பிலோ, அல்­லது வேறு எந்த குற்­றங்கள் தொடர்­பிலோ   அமைச்சர்  ரிஷாத் பதி­யுதீன் மீது குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் அவர் பதவி வில­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று   பிர­தமர் தெரி­வித்­துள்­ள­தாக  கூறப்­ப­டு­கின்­றது.
 இந்த நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை  சந்தித்து அதனை தோற்கடிக்கும் வியூகங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

Author: verified_user

0 comments: