Wednesday, May 8, 2019

ஆயிரத்துக்கும் அதிகமான விமானப்படை சீருடைகளை கடத்திய பாரவூர்தி பறிமுதல்!



சீதுவை முத்துவாடிய பிரதேசத்தில் பாரவூர்தியொன்றில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான விமானப்படை சீருடைகள் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காவற்துறையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பாரவூர்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பாரவூர்தி வலப்பனையில் இருந்து சீதுவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதியும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சீதுவை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: