காத்தான்குடியை அண்மித்த ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின்
வியாபார நிலையங்களை மூடி விடுமாறு நகரசபை அறிவித்துள்ளது .
இன்றய தினம் -16- முஸ்லீம் வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள கடை
உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் வலியுறுத்தும் கூட்டம் ஒன்றினை நகரசபை
ஏற்பாடு செய்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் .
ஆரையம்பதி நகரசபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வியாபாரத்தில் ஈடுபடும்
முஸ்லீம் களின் வியாபார நிலையங்களை மூடி விடு மாறு நகரசபை கேட்டுக்
கொண்டுள்ளது .
ஆரையம்பதி சந்தைப் பகுதியில் நீண்ட நாட்களாக முஸ்லிம்கள் வியாபாரத்தில்
ஈடுபட்டுவருகின்றனர் . அதே போன்று காத்தான்குடி நகரசபை
எல்லைகளுக்குள்ளும் தமிழ்ச் சகோதரர்கள் சிறு வியாபாரத்திலும்
அன்றாட கூலிவேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் .
இந் நிலையில் ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள இனவாதிகளின் முடிவுக்கு
நகரசபை கட்டுப் பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி சம்மேளனம் ஆரயம்பதியில்
வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் சகோதரர்களை சந்தித்து. கலந்துரையாடல்களை
நடத்தி பாதுகாப்புக் காரணங்களுக்காக தற்காலிகமாக அங்கிருந்து
வியாபார நிலையங்களை மூடி விடுமாறு வியாபாரிகளுக்கு ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.
Faiz Razik
Faiz Razik

0 comments: