மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு திகதி ஒன்றைக் கோரியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை காலம் தாழ்த்தாமல் விரைவாக நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை ஜனாதிபதியினால் நாளைய தினத்தில் வேண்டுமானாலும் நடத்த முடியும்.
எனினும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு சில காலம் அவசியமாகும்.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

0 comments: