உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையில் நீர்கொழும்பில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
பழிவாங்கும் படலம் வேண்டவே வேண்டாம். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே நாம் விரும்புகின்றோம்.
இந்த வன்முறையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் அனைவரையும் அரசு கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 comments: