Wednesday, May 8, 2019

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி அவசர அறிவிப்பு


மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை! - ஜனாதிபதி

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரவும் அதன் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கல்முனை - சாந்தமருது பிரதேசத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது , கடந்த 26ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிற்கு சென்று ஜனாதிபதி பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், பயங்கரவாதம் உலகில் எங்கும் வெற்றிப்பெற்றதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
 
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கை நாட்டின் பிரச்சினை மாத்திரம் இல்லையெனவும் இது சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடு எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Author: verified_user

0 comments: