Monday, May 13, 2019

ஜனாதிபதி சீன விஜயத்தின் முன் இடம் பெற்ற கூட்டத்தில் நடந்தது என்ன?


அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு சபையின் ஒன்றிணைந்த கூட்டம் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதியின் சீன விஜயத்தை கருத்திற் கொண்டு முன்கூட்டியே அமைச்சரவை மற்றும் பாதுகாப்பு சபையின் ஒன்றிணைந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.



இதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.



நேற்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது அமைச்சர் ரிசாட் பதியூதீன், தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீண்ட நேர தெளிவுப்படுத்தல்களை மேற்கொண்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.



இலங்கை, சீனாவுடன் இரண்டு பாதுகாப்பு உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.



நேற்று இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.



இதேவேளை, சீனாவில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை சீனா நோக்கி புறப்பட்டார்.



ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 302ரக விமானத்தில் அவர் உள்ளிட்ட 27 பேர் சீனா நோக்கி பயணித்ததாக எமது கட்டுநாயக்க விமானநிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளர்.



இந்த மாநாடு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

Author: verified_user

0 comments: