கொழும்பு, கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதியான அலாவுதீன் அஹமட் என்பவரின் சகோதரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவித்திருக்கிறது.
இவருடன் சேர்த்து மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பொலிஸாரின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

0 comments: