பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தவறாது பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.
தற்போது பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
எனினும் கொழும்பு உள்ளிட்ட சில முக்கியமான நகரங்களின் பாடசாலைகளுக்கான மாணவர் வருகை மிகவும் குறைவாக இருக்கிறது.
நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து, பாடசாலைகளுக்கான பாதுகாப்பு மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

0 comments: