Friday, May 3, 2019

600 கடிதங்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட கணினி பொலிஸாரால் மீட்பு


600 கடிதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினி மற்றும் பிரதியடிக்கும் இயந்திரம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த உபகரணங்கள் பொது நிறுவனங்கள் அமைச்சில் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 3 சந்தேகநபர்கள் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: