சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் இருந்து, தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக தயார் நிலையில் இருந்த பெண்கள் அணியும் வௌ்ளை நிற ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்கள் குறித்த ஆடைகளை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது வீட்டில் இருந்து 5 ஆடைகள் கிடைத்துள்ளதாகவும் கொள்வனவு செய்யப்பட்ட ஏனைய 4 ஆடைகளை தேடும் நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட ஆடைகளை முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக அணிவதில்லை. இந்த ஆடைகளை அணிந்து சிங்கள பெண்கள் போன்று சென்று தாக்குதல் மேற்கொள்வதற்காக ஆடை கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments: