Monday, April 29, 2019

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது



இருவேறு பிரதேசங்களில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர் காவல்துறை அதிரப்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யும் போது அவரிடமிருந்து 560 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, உகன பகுதியில் சட்டவிரோத சிகரட்டுக்கள் 200 உடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: