Monday, April 29, 2019

குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய மேலும் ஒரு புதிய காணொளி வெளியானது


தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் கொழும்பு வழிநடத்தல்களை மேற்கொண்ட மொஹமட் ஃபரூக் மொஹமட் ஃபவாஸை 72 மணி நேரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அவரை இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வாழைத்தோட்டம் பகுதியில் அடுக்குமாடி வீடொன்றில் அவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார்.


இதன்போது அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கைடயக்க தொலைபேசி மற்றும் மடிக்கணனியிலிருந்தும் விசாரணைகளுக்கு தேவையான பல தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


கடந்த 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் குறித்த சந்தேக நபர் சிற்றூர்தியொன்றில் பயணித்து குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களை தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.


இதன்போது தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மேலும் ஒருவருக்கு விளக்கமளித்துள்ளதும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.


மேலும் சந்தேக நபரிடமிருந்து இரண்டு சாரதி அனுமதி பத்திரங்களும், மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் என கூறப்படும் அடையாள அட்டையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Author: verified_user

0 comments: