Tuesday, April 30, 2019

எனது அலுவலகத்தில் ஆயுதம் இல்லை - ரவைகள் எம்.எஸ்.டிக்கு உரித்தானவை- குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்- கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ்-

தமது பாதுகாப்புக்கு இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெட்டியில் இருந்தே 40 ரவைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,தனது அலுவலகத்தில் இருந்து எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லையென தெரிவித்தார்.

காத்தான்குடி ரெலிகொம் வீதியில் உள்ள ஆளுநரின் அரசியல் அலுவலகத்தில் ஆயுதங்கள் – துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தமை குறித்து ” தமிழன் ” செய்திப்பிரிவு ஆளுனருடன் தொடர்புகொண்டு கேட்டது.அப்போதே இவ்வாறு கூறிய ஆளுநர் மேலும் கூறியதாவது ,

காத்தான்குடியில் உள்ள எனது அரசியல் அலுவலகத்துக்கு பின்னால் உள்ள அறை ஒன்றில் எனது பாதுகாப்பு (எம்.எஸ்.டி ) உத்தியோகத்தர்கள் தங்குவது வழக்கம்.அவர்களின் பெட்டியில் இருந்த ரவைகள் பொலிஸின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டவை.அமைச்சர் பாதுகாப்பு பிரிவிடம் இதற்கான அனுமதி ஆவணங்கள் உள்ளன.இப்போது எனது அலுவலர்கள் இருவர் விசாரிக்கப்படுகின்றனர். உருசிய ஆவணங்கள் கிடைத்தவுடன் பொலிஸார் அவர்களை விடுவிப்பார்கள்.எனது அலுவலகத்தில் அப்படியான ஆயுதங்கள் இல்லை.அப்படி வைத்திருக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை ”

என்றார் ஹிஸ்புல்லாஹ்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: