நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்தை தோட்டப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு உள்ளான 4 பெண் தொழிலாளர்கள் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள தேயிலை மலையில் இவர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோதே, இன்று (30) முற்பகல் குளவிக் கொட்டுக்கு உள்ளானார்கள்.
தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவிக் கூடொன்று உடைந்ததைத் தொடர்ந்து கலைந்துவந்து குளவிகள், தங்களை சூழ்ந்து கொட்டியதாக, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
(எம்.கிருஸ்ணா -நோட்டன் பிரிஜ் நிருபர்)

0 comments: