Showing posts with label GULF. Show all posts
Showing posts with label GULF. Show all posts

Monday, June 10, 2019

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்! கத்தார் முதலாம் இடம் பெற்று அசத்தல்!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியல்! கத்தார் முதலாம் இடம் பெற்று அசத்தல்!

உலகின் பணக்கார நாடுகள் பட்டியலை Global Finance சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன்படி கத்தார் இராச்சியம் 134,623 GDPகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சவூதிக் கூட்டணி நாடுகள் தொடர்பை துண்டித்த பின்னர் கத்தார் பொருளாராத ரீதியாக வீழ்ச்சியடையவில்லை என்பது இதன் மூலம் தெரிவாகின்றது. 

முதல்  10 இடங்களைப் பெற்றுள்ள நாடுகள் வருமாறு


முதல் 10 இடங்களுக்குள் 3 அரபு நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.  முதல் இடத்த்தில் கத்தாரும், 8 வது இடத்தில் அமீரகமும், 9 வது இடத்தில் குவைத்தும் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 12வது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இலங்கை 99ம் இடத்திலும், தன்னை வல்லசாக்க எத்தனிக்கும் இந்தியா 124 வது இடத்திலும், பாகிஸ்தான் 138வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

Tuesday, June 4, 2019

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

முஸ்லிம்களின் பாது­காப்பை இலங்கை உறு­திப்­ப­டுத்த வேண்டும் -இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்பு

இலங்­கையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­மு­றைகள் குறித்து கவலை வெளி­யிட்­டுள்ள இஸ்­லா­மிய சர்­வ­தேச கூட்­ட­மைப்­பான ஓ.ஐ.சி முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­மாறும் கேட்­டுள்­ளது.
சவூ­தியில் நடந்த 14 ஆவது தேசிய மாநாட்டில் இது தொடர்பில் தீர்­மா­னமும் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அந்த அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
அந்தத் தீர்­மா­னத்தில் இலங்கை தொடர்­பான விட­யமும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அதில் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­மு­றைகள் தொடர்பில் மாநாடு கவனம் செலுத்­தி­ய­துடன்  கண்­ட­னத்­தையும் தெரி­விக்­கின்­றது.முஸ்­லிம்­க­ளுக்­கான பாது­கா ப்பை உறுதிப்படுத்துமாறும் மாநாடு கோருகின்றது என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

Monday, June 3, 2019

சவுதியில் நாளை செவ்வாய்கிழமை, பெருநாள் என அறிவிப்பு

சவுதியில் நாளை செவ்வாய்கிழமை, பெருநாள் என அறிவிப்பு

சவுதியில் நாளைசெவ்வாய்கிழமை பெருநாள் என அறிவிப்பு

Eid Al-Fitr moon on today, Saudi Arabia calls for sighting Shawwal
ரமலான் முடிந்ததும் சவுதியில் இந்த மூன்று அறிஞர்களுக்கும் மரண தண்டனை

ரமலான் முடிந்ததும் சவுதியில் இந்த மூன்று அறிஞர்களுக்கும் மரண தண்டனை

ரமலான் முடிந்ததும் சவுதியில் மூன்று அறிஞர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள ஷேக் சல்மான் அல்-அத்வா, அவத் அல்-குர்னி மற்றும் அலி அல்-ஓமரி ஆகியோருக்கு ரமலான் முடிந்ததும், சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சவூதி அரேபியாவில் இருந்து அறிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் Middle East Eye இணையதளம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது.

அல்-அத்வா என்பவர் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த ஒரு "இஸ்லாமிய சீர்திருத்தவாதி". அல்-குர்னி ஒரு போதகர், அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அல்-ஓமரி நன்கு அறியப்பட்ட ஒளிபரப்பாளர் ஆவார்.

இவர்கள் மூவரும் 2017 ம் ஆண்டு எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்ட கைது அலையின் போது கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூன்று பேரும் கடந்த மே 1ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் திகதி குறிப்பிடாமலேயே வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சவுதியில் கடந்த ஏப்ரல் 23ம் திகதியன்று ஒரே நாளில் 32 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதன்காரணமாக பல நாடுகளில் இருந்து எதிர்வினைகள் ஆற்றப்பட்டன.

இந்த சம்பவமானது சர்வதேச கண்டனம் எவ்வளவு வலிமையானது என்பதைக் கண்டறிய ஒரு சோதனை பலூனாக பயன்படுத்தப்பட்டது என ஒரு ஆதாரம் தெரிவிக்கிறது.

Wednesday, May 29, 2019

3 மாதத்துக்கு மேல் சம்பளம் கிடைக்காவிட்டால் கம்பெனிக்கு எதிராக எவ்வாறு Labour Department இல் முறையீடு செய்வது என்பது பற்றிய விளக்கம்.

3 மாதத்துக்கு மேல் சம்பளம் கிடைக்காவிட்டால் கம்பெனிக்கு எதிராக எவ்வாறு Labour Department இல் முறையீடு செய்வது என்பது பற்றிய விளக்கம்.


3 மாதத்துக்கு மேல் சம்பளம் கிடைக்காவிட்டால் கம்பெனிக்கு எதிராக எவ்வாறு Labour Department இல் முறையீடு செய்வது என்பது பற்றிய விளக்கம்.
1. உங்களுடைய கம்பனியின் முகாமையாளர் (Manager) அல்லது மன்தூப் (PRO) இனுடைய தொலைபேசி இலக்கத்தை தெரிந்து வைத்துக்கொள்வதுடன் கம்பனியின் முழுப் பெயர் மற்றும் முகவரியும் தெரிந்திருக்க வேண்டும்.
2. அல் அட்டியா (Al Attiya) இல் அமைந்திருக்கும் Street 13 க்கு செல்லுங்கள் அதிகமான Taxi Driver களுக்கு தெரிந்திருக்கும்.
3. Reception இல் முறையீடு செய்வதற்கு ஒரு Form தருவார்கள், அதனை பூர்த்தி செய்து முறையீடுகளை பெறுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில ஒப்படைத்து உங்களுடைடைய பிரச்சினைகளை சுருக்கமாக அந்த நபரிடம் கூறவும்.
4. முறையீடு பெற்றுக் கொள்ளும் அதிகாரி உங்களுடைய கம்பனி முகாமையாளர் (Manager) அல்லது மன்தூப் (PRO) க்கு Call எடுத்து அவர்களுடைய பதிலையும் செவிமடுத்து தீர்வினை கூறுவார்.
5. இந்த தீர்வானது சில நேரங்களில் உடனடியாகவும் அல்லது சில வாரங்களும் எடுக்கலாம்.
கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
1. Passport 
2. ID
3. உங்கள் வங்கி கணக்கு விபரம் (Last 6 months)
4. காசாக அல்லது காசோலையாக பெறுவதாயின் Payslip

UAE பிரஜைகள் விடுமுறைக்காக இலங்கைக்கு செல்லவேண்டாம் என அவசர அறிவிப்பு!

UAE பிரஜைகள் விடுமுறைக்காக இலங்கைக்கு செல்லவேண்டாம் என அவசர அறிவிப்பு!

றமழான் விடுமுறை காலங்களில் இலங்கைக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஐக்கிய அரபு இராச்சியம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய வௌிவிவகார மற்றும் சர்வதேச உறவுகள் அமைச்சு தனது உத்தியோகபூர்வ டிவிட்டர் கணக்கினூடாக தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்திற்கு +94 112-301-601 அல்லது அமைச்சின் 800-444-44 என்ற எண்ணுடன் இலவசமாக தொடர்புகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்புவதற்கான UAE அரசாங்கத்தின் Twajudi சேவையில் பதிவு செய்யுமாறும் தனது பிரஜைகளுக்கு அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, May 28, 2019

கத்தாரில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுடையவரா நீங்கள்! வாங்க இணையத்தில் செக் செய்யலாம்!

கத்தாரில் நிரந்தர குடியுரிமை பெற தகுதியுடையவரா நீங்கள்! வாங்க இணையத்தில் செக் செய்யலாம்!

கத்தார் வாழ் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுமை வழங்கும் சட்டத்தை கத்தார் அண்மையில் நிறைவேற்றி இருக்கிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில தனிப்பட்ட தகைமைகளைக் கொண்டுள்ள கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அந்த வகையில் கட்டாரில் இருப்பவர்கள், கட்டார் நிரந்தர குடியுரிமைக்கு நீங்கள் தகுதியானவர்களா என்று check பண்ணுவதற்கு கீழுள்ள Link யை அழுத்தி அதில் உங்களின் Qatar ID இலக்கம் மற்றும் முடிவடையும் திகதி போன்றவற்றை பூர்த்தி செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.



Sunday, May 26, 2019

சவுதியில் புதிய 10 விதிமுறைகள் அறிமுகம்; மீறினால் 5000 ரியால் வரையில் அபராதம்!

சவுதியில் புதிய 10 விதிமுறைகள் அறிமுகம்; மீறினால் 5000 ரியால் வரையில் அபராதம்!

சவுதியில் பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய 10 விதிமுறைகள் நேற்று (25.05.2019) முதல் நடைமுறைக்கு வந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இந்த விதிமுறைகள் குறித்த விரிவான விளக்கம் பின்வருமாறு:

சவுதியின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பேணிக்காக்க கடந்த மாதம் சவுதி அமைச்சரவை இதற்கு ஒப்புதல் வழங்கி நிலையில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் விதத்தில் ஆடை அணிவது ,பொது இடங்களில் உள்ள சுவர்கள் மற்றும் வாகனங்களில் வாசகங்கள் எழுதுவது மற்றும் வரைவது உள்ளிட்டவை செய்தல், தேவையற்ற கண்ணியமில்லாத பேசுங்கள் உள்ளிட்ட 10 விதிமுறைகள் இதில் இடம்பெற்றுள்ளது.

வணிக வளாகங்கள், ஹோட்டல், கடற்கரை, பூங்காக்கள், சாலைகள், திரையரங்குகள் மற்றும் உல்லாச பொழுதுபோக்கு இடங்கள் ஆகிய இடங்களில் இந்த சட்டம் செல்லுபடியாகும் விதத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மீறும் நபர்களுக்கு 5000 ரியால் வரையில் பிழை விதிக்கப்படும்.
ஒரு வருடத்திற்குள் இதை தவறு செய்து பிடிபட்டால் பிழை இரண்டு மடங்குகள் வரையில் செலுத்த வேண்டியது நிலை ஏற்படும்.வெளியுறவுத்,சுற்றுலா துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறைகள் சேர்ந்தது சட்டத்தை ஒருங்கிணைத்து நிறைவேற்றும். பிழைதண்டனை கிடைத்த நபர் எந்த துறையின் கீழ் தண்டனை பெற்றிர்களோ அந்த துறையின் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவும் சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் கலாச்சார ஆகியவற்றை பேணும் விதத்தில் இந்த சட்டம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் உள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டம் சவுதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோருக்கு ஒருபோல் பொருந்தும் என்றும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Report by Kuwait tamil pasanga team

Saturday, May 25, 2019

கத்தாரில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! கத்தார் அமீர் டுவிட்டர் ஊடா அறிவித்தார்

கத்தாரில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! கத்தார் அமீர் டுவிட்டர் ஊடா அறிவித்தார்

கத்தாரில் உள்ளவர்கள் இனி தெளிவாக வாட்ஸ்அப் கோள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவலை கத்தாரின் பிரபல இணையத்தளமான கத்தார் லிவிங் வெளியிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு கத்தார் - சவுதிக் கூட்டணி நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து கத்தாரில் வாஸ்அப், வைபர் போன்ற அழைப்பு வசதிகள் அரசாங்கத்தால்  நிறுத்தப்பட்டன. என்றாலும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

கடந்த இரண்டு வருடங்களாக கத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் உட்பட அனைவரும் வாட்ஸ்அப் அழைப்புக்காக VPN உதவிய நாடிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது VPN  உதவியின்றி நேரடியாக வாட்ஸ்அப் அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என்பதாக கத்தார் லிவிங் தெரிவித்துள்ளது. கத்தாரில் வாட்ஸ்அப் அழைப்பு வசதி சிறப்பாக செயற்படுவதையிட்டு பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.