Showing posts with label ARTICLE. Show all posts
Showing posts with label ARTICLE. Show all posts

Sunday, June 9, 2019

எடுத்ததற்கெல்லாம் உலமா சபையை, விமர்சனம் செய்வதை தவிர்ப்போம்...!

எடுத்ததற்கெல்லாம் உலமா சபையை, விமர்சனம் செய்வதை தவிர்ப்போம்...!

எல்லா சமூகத்தினராலும் அவரவர்களின் சமயத் தலைவர்களுக்கென தனி மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும்போது முஸ்லிம்களின் மார்க்க தலைமையான உலமாசபைக்கு மாத்திரம் முஸ்லிம்களினாலேயே பலத்த விமர்சனமும், தேவையற்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுவது கவலைக்குரியதாகும். உண்மையில் ஏனையவர்களைவிடவும் சமூகம் தொடர்பாக அதிக பொறுப்புணர்வோடு செயற்படுபவர்கள் இந்த உலமாசபை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை எங்களைவிடவும் மாற்று மதத்தவர்கள் நன்கறிந்து வைத்துள்ளனர்.

முஸ்லிம்கள் பாதுகாப்பு ரீதியாக மிகவும் அச்சுருத்தலுக்குள்ளாகி இருக்கும் இந்த இக்கட்டான காலத்தில் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கவலையோடும், பிரார்த்தனையோடும் 24 மணிநேரமும் தங்களாலான சகல முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்கின்றனர். அலுத்கம தொடக்கம் மினுவாங்கொடை வரையில் இடம்பெற்ற வன்முறைகளின்மூலம் மீண்டுமொரு முறை இனக்கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அடியோடொழிக்க எத்தனிக்கும் சில கடும்போக்கு வாதிகளின் பல சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டதில் இவர்களின் பங்களிப்பு அளப்பெரியது.

தற்போது உலகம் பூராகவும் பேசப்படும் வரலாற்று முக்கியத்துவமிக்க சம்பவமாக வர்ணிக்கப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமைக்கு பிரதான வழிகாட்டியும் இவர்கள்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஞானசார தேரர் காலக்கெடு விதித்த அன்றைய தினமே கட்சி கொள்கையாலும் கருத்து முரண்பாட்டாலும் பிரிந்திருந்த அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் அவசரஅவசரமாக அழைத்து சமூகப் பாதுகாப்புக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை மிகவும் உருக்கமாக வேண்டிக் கொள்ளப்பட்டதன் விளைவே இன்றைய ஒற்றுமையாகும். இருந்தும் நடைமுறைப் பிரச்சினை கருதி இதுவரை இது தொடர்பாக பகிரங்கப்படுத்தவில்லை. அத்தோடு இவர்களின் செயற்பாடுகள் இறை திருப்தியையும், சமூக நலனையும் மாத்திரம் நோக்காக கொண்டிருப்பதனால் விளம்பரங்களோ ஆரவாரமோ கொண்டதாக இருப்பதில்லை. மீடியாக்களில் மாத்திரம் தகவல்களை எதிர்பார்க்கும் பலருக்கு இவர்களின் செயற்பாடுகள் சென்றடைவதுமில்லை.

இதன் காரணமாகவே இவர்கள் மீதான விமர்சனமும், அவமதிப்பும் (கற்றவர்களால்கூட) தொடர்ந்த வண்ணமுள்ளன.

எனவே இந்நிலை மாற வேண்டும். அரயல்வாதிகளை விமர்சனம் செய்வதுபோல் எடுத்ததற்கெல்லாம் உலமா சபையையும் விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களின் பணியை அவர்களால் முடிந்தவரை சிறப்பாக செய்கின்றனர். அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கென உயர்ந்த அந்தஷ்த்துண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது.

நளீம் றம்சாத்.

Thursday, June 6, 2019

போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா?

போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா?

மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்  அதிகமாக ஊடுருவுவதாக, புதிய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

உணவு மற்றும் காற்றின் மூலம் மனித உடலை ஊடுருவும் பிளாஸ்டிக் துகள்கள், சமீப காலத்தில் அதிகரித்து காணப்படுவதாக குறித்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவது சுற்றுச் சூழல் தொடர்பில் பெரியளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டில், காற்றின் மாசு குறித்த விழிப்புணர்வை ஐநா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆண்டுதோறும் 52,000 நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவி செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்படும் சின்தடிக் உடைகள், கார் டயர்கள் மற்றும் கென்டக்ட் லென்சுகள் உள்ளிட்டவற்றில் இருந்து உருவாகும் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள், மனிதர்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் சென்று, பாதிப்பை உருவாக்குவதாக அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காற்று மாசுப்பாடு காரணமாக வருடம் தோறும் 1,21,000 பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாகவும், குறிப்பாக பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் கூடுதலாக 90,000 பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலை சென்றடைவதாகவும் குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.

ஆயினும் 130 மைக்ரோமீட்டருக்கும் குறைவான இந்த பிளாஸ்டிக் துகள்கள், மனிதனின் திசுக்களில் ஊடுருவி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் அளவிற்கு மிகவும் அபாயம் மிக்கவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 5, 2019

ரத்ன தேரரே, உங்களால் இப்படிச் செய்ய முடியுமா..?

ரத்ன தேரரே, உங்களால் இப்படிச் செய்ய முடியுமா..?



அத்துரலிய ரத்ன தேரோ அவர்களே....!

மூன்று பேருக்கு எதிராக, நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, மூன்று நாட்கள் ( தண்ணீர் மட்டும் குடித்து ) உண்ணா விரதமிருந்து , சாதித்து காட்டிய நீங்கள் தான் உண்மையான பௌத்தன் என்று இலங்கை நாடே ஏற்றுக்கொண்டுள்ளது .

எனவே , நீங்கள் நினைத்தால் இந்த நாட்டில் எதையும் செய்யலாம் சாதிக்கலாம். அந்த வகையில் இன்னும் பல விடயங்கள் இருந்தாலும் ஒருசிலதை முன்வைக்கின்றேன்.......!

₹ மத்திய கிழக்கு நாடுகளில், அரேபியர்களின் ஆடைகளையும், மலசல கூடங்களையும் கழுவுகின்ற பௌத்த மதத்தைச் சார்ந்த சகலரும் இலங்கை வர வேண்டும்.

₹ நமது நாட்டு வளங்கள் , எந்தவொரு அரபு நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடாது (உதாரணம்- தேயிலை).

₹ அரபு நாடுகளிலிருந்து எந்தவொரு பொருட்களும் கொள்வனவு செய்யக் கூடாது ( உதாரணம்- எரிபொருட்கள் ,தானிய வகைகள்).

₹ இலங்கை நாட்டுக்கு, அரபு நாடுகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட சகல ஆஸ்பத்ரிகளும் உடைத்து நொறுக்கப்பட்ட வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிருதம் இருந்து சாதிக்க நீங்கள் தயார் என்றால்...., உங்களுக்கு உதவியாக பாடுபடவும், உங்களோடு சேர்ந்து பயணிக்கவும் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தயார்.......

Tuesday, June 4, 2019

ஜம்இய்யதுல் உலமாவின், மேலான கவனத்திற்கு...!

ஜம்இய்யதுல் உலமாவின், மேலான கவனத்திற்கு...!

நேற்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இப்தார் நிகழ்ச்சியில்;; கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் குழு முஸ்லிம்களின் பாதுகாப்பு, அப்பாவிக் கைதிகளின் விடுதலை, முஸ்லிம் பெண்களது ஆடை ஆகியன தொடர்பாக வரையப்பட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும், ஜனாதிபதியின் சபையில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் சமூகத்தின் கௌரவத்தை எடுத்துக் காட்டியமையும் ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அல்லாஹ் ஜம்இய்யத் உலமா தலைவருக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அருள் புரியவேண்டும்.

இங்கு நான் எழுதப்போகின்ற விடயம் ஜம்இய்யத்துல் உலமாவை விமர்சிப்பதற்காக அல்ல. ஓர் ஆலோசனையை முன்வைப்பதற்காக மட்டுமே.

நான் ஜம்இய்யாவிடம் மிகத் தாழ்மையாக முன்வைக்கின்ற ஆலோசனை யாதெனில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் ஜம்இய்யா தனது கருத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே.

ஜனாதிபதிக்கு வழங்கிய கடிதத்தில் முஸ்லிம் பெண்களின் ஆடைதொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கோறியிருந்தமை ஜம்இய்யா ‘பெண்கள் முகம் மறைக்க வேண்டும்’ என்ற விடயத்தில் இன்னும் பிடிவாதமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது, ஜம்இய்யதுல் உலமா இஸ்லாத்தையும் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப்பு என்றவகையில் குறித்த விடயத்தில் பிடிவாதத்தைத் தளர்த்த வேண்டும் என்பதே எனது ஆலோசனையாகும். அதற்கான நியாயங்கள் பல

1. அரசாங்கம் முகத்தை மறைத்தலை மாத்திரமே தடைசெய்தது. ஆனால் இனவாதிகளோ அபாயா, இஸ்காப் ஆகியவற்றைக் கூட எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடாத்தினர். அதனால் முஸ்லிம் பெண்கள் பல்வேறு இடைஞ்சல்களுக்கு உள்ளாகினர். இவ்வாறான நிலையில் நாம் முகம் மறைத்தலுக்கான அனுமதியைப் பெற்று, வெற்றி பெற்றோம் என்ற மகிழ்ச்சியல் அதை நடைமுறைப் படுத்தும் போது பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம்.

2. முகம் மறைக்கும் விடயத்தில் உலமாக்கள் மத்தியல் நிறையக் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஷாபி மத்ஹபில் கூட முகம் மறைத்தல் கட்டாயமல்ல. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமா முகம் மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பது பொருத்தமானதல்ல.

3. முகம் மறைத்தல் பெண்ணின் உரிமையோடு தொடர்பான விடயம். எனவே அதைப் பெண்கள் பேசட்டும். ஜம்இய்யதுல் உலமாவோ அல்லது ஏனைய ஆண்களோ அதைப் பற்றிப் பேசும் போது இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்ற விமர்சனத்திற்கு ஆதாரமாய் அமைந்துவிடும்

4. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை விட ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ‘பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்;’ என்ற அல்குர்ஆனியக் கட்டளைக்கு முன்னுரிமை வழங்குதல் இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தும்.

5. முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை வெறுப்பதற்கு பெண்களின் முகத்திரையும் ஒரு காரணம் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் முகத்திரை முக்கியமா? இஸ்லாம் பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்தல் முக்கியமா? பொருத்தமானதைத் தெரிவுசெய்வதில் ஜம்இய்யா அதி;க கவனம் செலுத்த வேண்டும்.

6. முகத்தை மூடும் சில பெண்கள் பொது இடங்களில் வெளிப்படுத்தும் நடத்தைக் கோளம் முகத்தை மறைப்பதற்காகக் கூறப்படும் தாத்பரியத்திற்கு முரணாக இருத்தல்

7. தமது முகத்தை அல்லது தமது பெண்களின் முகத்தை எந்த ஆணும் பார்க்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள குறைந்த வீதத்தினருக்காக போராடுவது முழு சமூகத்தையும் பிரதிநிதிதுவப்படுத்தும் ஜம்இய்யாவுக்குப் பொருத்தமானதா?

8. ஜம்இய்யா முகத்திரைக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் போது, முஸ்லிம் அல்லாத அரசியல் வாதிகள் கூட முகத்திரை விவகாரம் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கலாம். அதனால் ஏற்படும் வாதப் பிரதிவாதங்களால் முகத்திரை முஸ்லிம்களின் அவமானச் சின்னமாக மாறலாம்.

9. ஜம்இய்யதுல் உலமா முகத்திரையை வலியுறுத்தும் போது தொழில் புரியும் சில பெண்களும் அதை தமக்குக் கட்டாயப்படுத்திக் கொள்கின்றனர். இது பல சந்தர்ப்பங்களில் அவர்களது தொழிலுக்கு இடைஞ்சலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகின்றனர்.

10. சில முஸ்லிம் பெண்கள் சுயநலனுக்காகவும் குறுகிய இலாபத்திற்காகவும் முகத்திரையைப் பயன்படுத்துவதனாலும், சில சமூகவிரோதிகள் முகத்திரை அணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதனாலும் முகத்திரைக்கிருந்த நம்பிக்கையும் நல்லபிப்பிராயமும் மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.

11. அனைத்துக்கும் மேலாக, முகம் மூடுவதை அல்லாஹ் கட்டாயப்படுத்தாத நிலையில் ஒருசாராரின் விருப்பத்திற்கமைய அதைக் கட்டாய நிலைக்குக் கொண்டுவருவது அல்லாஹ்வின் அதிகாரத்தில் கைவித்த குற்றத்திற்கு, அவன் இலகுவாக்கியதை கஷ்டப்படுத்திய குற்றத்திற்கு ஆளாக்க மாட்டாதா?

ஜம்இய்யதுல் உலமா முகம் மூடுவதைக் கட்டாயப்படுத்தவில்லை என்றிருப்பின் இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்பதையும் தற்போது நாட்டில் உள்ள நிலைமைகளையும் கவனத்திற்கொண்டு இனிமேல் ஜம்இய்யதுல் உலமா முகத்திரை விவகாரத்தை பேசாமல் இருப்பதே ஜம்இய்யாவுக்கும் சிறந்தது, முஸ்லிம்களுக்கும் சிறந்தது என்பதே எனது பணிவான அபிப்பிராயமாகும்.

அஷ்செய்க் எம்.எம். பஸ்லுர்ரஹ்மான் Naleemi, B.A., SLTS
"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்பது முட்டாள்தனம்

"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்பது முட்டாள்தனம்

- Kalai Marx -

"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்..." என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் மூலம் அறிய முடிகின்றது. இது உண்மையில் "அறியாமை, இனவாதம், முட்டாள்தனம்" கலந்த கற்பனாவாதக் கருத்து. பாமரர் முதல் படித்தவர் வரையில் இந்தத் தப்பெண்ணம் நிலவுகின்றது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் குறித்தும் இது போன்றதொரு தப்பெண்ணம் சிங்களவர் மத்தியில் இருந்தது. அதாவது "தமிழர் மீது கைவைத்தால் இந்தியா தலையிடும்..." என்று நம்பினார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் (ஈழத்)தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள். இந்தியாவில் இருப்பவர்களும் இந்துத் தமிழர்கள் தான்.

இன்று இதைக் கேட்டு பலர் சிரிக்கலாம். ஆனால், ஐம்பதுகள் முதல் எண்பதுகள் வரையான காலகட்டத்தில், பெரும்பாலான சிங்களவரின் சிந்தனை அவ்வாறாகத் தான் இருந்தது. அவர்களும் தம்மை ஒடுக்கப்படும் சிறுபான்மை இனமாகக் கருதிக் கொண்டனர். பெரும்பான்மை இனமான தமிழர்கள் இந்திய உதவியுடன் சிங்களவரை அழித்து விடுவார்கள் என்று அஞ்சினார்கள். குறிப்பாக, இந்திய - இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வந்தது.

ஆகையினால் "முஸ்லிம் நாடுகள் தலையிடும்... கேள்வி கேட்கும்..." என்றெல்லாம் நினைத்துக் கொள்வது ஒரு முட்டாள்தனமான இனவாதக் கருத்து. நவீன உலகில் எல்லா நாடுகளும் தத்தமது அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதுகின்றன. முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமை, கிறிஸ்தவ நாடுகளின் ஒற்றுமை என்று எதுவும் கிடையாது. அந்த நாடுகளே தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. ஏனென்றால் மத உணர்வை விட, இன உணர்வை விட பண உணர்வே முக்கியமானது. அது தான் யதார்த்தம்.

இந்தியாவில், 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின்னர் நடந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். 2002 ம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப் பட்டனர். அதை விட முஸ்லிகளுக்கு எதிரான அரச பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மாட்டிறைச்சி வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப் பட்ட முஸ்லிம்கள் ஏராளம்.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை எந்த முஸ்லிம் நாடு தட்டிக் கேட்டது? இதன் எதிர்விளைவாக, அயலில் உள்ள முஸ்லிம் நாடுகளான பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியா மீது படையெடுத்தனவா? வளைகுடா முஸ்லிம் நாடுகள் இந்தியாவுக்கு ஒரு சொட்டு எண்ணை கொடுக்க மாட்டோம் என்று பகிஷ்கரித்தனவா? தமது நாடுகளில் வேலை செய்யும் இலட்சக் கணக்கான இந்தியத் தொழிலார்களை, துறை சார் நிபுணர்களை திருப்பி அனுப்பி விட்டனவா? குறைந்த பட்சம், எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவுடனான வர்த்தகத் தொடர்புகளை முறித்துக் கொண்டனவா? இல்லை. இதில் எதுவுமே நடக்கவில்லை.

அன்று முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான நரேந்திர மோடி, இன்று இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் பல முஸ்லிம் நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளின் தலைவர்கள் எல்லாம், மோடியின் இரத்தக் கறை படிந்த கரங்களை பிடித்துக் குலுக்கி வரவேற்றார்கள். அந்த முஸ்லிம் நாடுகளின் அரசாங்கத்தில் இருந்த ஒருவர் கூட எதிர்ப்புக் காட்டவில்லை.

அதே நேரம், இனப்படுகொலை குற்றவாளி நரேந்திர மோடி தனது நாட்டுக்கு வரக் கூடாது என்று கிறிஸ்தவ அமெரிக்கா விசா கொடுக்க மறுத்தது. முஸ்லிம் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஒரு காலத்தில் மோடி உறுப்பினராக இருந்த இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம் எனத் தடை செய்தது. நரேந்திர மோடி இன்னொரு கிறிஸ்தவ நாடான பிரித்தானியாவுக்கு சென்ற நேரம் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக வெளியில் தலைகாட்டவில்லை.

இலங்கை அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள் என்றால், அதற்கு காரணம் முஸ்லிம் நாடுகளின் செல்வாக்கு அல்ல. முஸ்லிம் அமைச்சர்களை வைத்திருந்தால், முஸ்லிம் நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணலாம். அது மட்டுமல்ல, தனது நாட்டில் இனப் பிரச்சினை இல்லையென்று உலகை ஏமாற்றுவதற்கான பேரினவாத அரசின் தந்திரம். அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டுள்ளதாக காட்டி, இங்கே சிறுபான்மையினருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொல்லி வருகின்றது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகம் சிறப்பாக இயங்குவதாக காட்டிக் கொள்கிறது.

Monday, June 3, 2019

செவ்வாயில் களிமண் கனிமங்களை கண்டறிந்துள்ள கியூரியாசிட்டி

செவ்வாயில் களிமண் கனிமங்களை கண்டறிந்துள்ள கியூரியாசிட்டி

அமெரிக்காவின் நாசா ஆய்வுமையம் விண்ணுக்கு அனுமப்பியுள்ள கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாயின் பரப்பில் களிமண் கனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

நாசா ஆய்வு மையம் கியூரியாசிட்டி எனும் விண்கலத்தை கடந்த மே 12ஆம் திகதி, செவ்வாய் கிரகத்தின் மவுண்ட் ஷார்ப் என்ற பகுதியில் அபர்லேடி கில்மேரி என பெயரிடப்பட்டுள்ள இரு இடங்களில் துளையிட்டுள்ளது.
இதையடுத்து துளையிட்ட குறித்த பகுதியை செல்ஃபி படமாக எடுத்து கியூரியாசிட்டி நாசாவிற்கு அனுப்பியுள்ளது. அது துளையிட்ட இடங்களில் களிமண் கனிமங்கள் அதிக அளவிலிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உயிர்களுக்கு ஆதாரமான நீர் இருக்கும் இடங்களிலேயே களிமண் உருவாகும். அந்த வகையில், பல நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்கக் கூடுமா என்பதைக் கண்டறிவதற்காக மவுண்ட் ஷார்ப் பகுதியில் கியூரியாசிட்டி மேலும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, June 2, 2019

புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க…

புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க…

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.
புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் வேறு என்னென்ன மாதிரயான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுகிறது என்று தெரியுமா உங்களுக்கு… இனியாவது தெரிஞ்சிக்கோங்க… அதை தூக்கி கீழே வீசிடாதங்க…


சமையலறையில் பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும். ஆம். நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்

மொபைல் நீரில் விழுந்தால் செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க… செல்போனை தண்ணிக்குள்ள போட்றது. நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

ஆவணங்கள் வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

கத்தி கூர்மையாக பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

கத்தி கூர்மையாக பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

கத்தி கூர்மையாக பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

நகைகள் பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.
நகைகள் பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

ஜன்னல்கள் நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

ஷூ துர்நாற்றம் பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.குறிப்பு; இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

Wednesday, May 29, 2019

வரட்சியில் ஆண்டு முழுவதும் பசுந்தீவன உற்பத்தி செய்யும் முறை.....

வரட்சியில் ஆண்டு முழுவதும் பசுந்தீவன உற்பத்தி செய்யும் முறை.....

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் தொகைப் பெருக்கம், பெருகி வரும் தொழிற்சாலைகள் வரட்சி ஆகியவற்றால் இன்று விளை நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இது மட்டுமின்றி மழை அளவு குறைந்து வருவது, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம், கூலிக்கு ஆள்கள் கிடைக்காதது, அதிக கூலி ஆகிய காரணங்களால் இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு சத்தான பசுந்தீவனம் கிடைப்பதில்லை.

மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி முறை விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனங்களுக்கு ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் 7 முதல் 10 நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனமானது, ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான சீரான தரம், சுவை, சத்துக்கள் நிறைந்து காணப்படும். கல், மண், தூசி, பூச்சி மருந்துகள் ஆகியவை இல்லாமல் இருக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 800 முதல் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.
பயன்படுத்தும் விதைகள்
நன்றாகக் காய்ந்த மக்காச்சோளம், சோளம், கம்பு, கோதுமை, பார்லி, ஓட்ஸ், கேழ்வரகு, காராமணி ஆகிய பயிர் விதைகளாக இருக்க வேண்டும். நன்றாக முளைப்புத் திறன் உள்ள விதைகளாகவும் இருக்க வேண்டும்.


உற்பத்தி முறை
20-க்கு 15 அடி அளவுள்ள எளிமையான பசுமையான நிழல் வலை குடில் (பசுமைக்குடில்) அமைத்துக் கொள்ளலாம். இந்த குடிலில் மரம், இரும்பு தகடால் ஆன சாரம் வைத்து ரேக் அமைத்துக் கொள்ள வேண்டும். நிழல்வலை குடிலின் வெப்பநிலை 24 முதல் 27 டிகிரி செல்சியல், ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். முளை கட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி, ரேக்கில் அடுக்கி வைத்து விடலாம். தினமும் ஐந்தாறு முறை பூவாளி கொண்டோ அல்லது சிறிய நுண் நீர் தெளிப்பான் கொண்டோ, நீர் தெளிக்க வேண்டும்.
8 நாள்களில் 15 முதல் 20 செ.மீ. அளவுக்கு பசுந்தீவனம் வளர்ந்து விடும். இந்த பசுந்தீவன புற்களை வேரோடு எடுத்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். 300 சதுர அடிப் பரப்பளவில், வரட்சியில் பசுந்தீவனம் உற்பத்தி

தற்போதுள்ள சூழ்நிலையில் மக்கள் தொகைப் பெருக்கம், பெருகி வரும் தொழிற்சாலைகள் வரட்சி ஆகியவற்றால் இன்று விளை நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இது மட்டுமின்றி மழை அளவு குறைந்து வருவது, வேளாண் இடுபொருள்களின் விலையேற்றம், கூலிக்கு ஆள்கள் கிடைக்காதது, அதிக கூலி ஆகிய காரணங்களால் இன்றைய சூழ்நிலையில் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கால்நடைகளுக்கு சத்தான பசுந்தீவனம் கிடைப்பதில்லை.
மண் இல்லாமல் பசுந்தீவனம் உற்பத்தி முறை விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனங்களுக்கு ஹைட்ரோபோனிக் பசுந்தீவனம் என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் 7 முதல் 10 நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். மேலும் குறைந்த எண்ணிக்கையிலான வேலையாள்கள், குறைந்த நீரில் ஆண்டு முழுவதும் பசுந்தீவனத்தை தடையின்றி உற்பத்தி செய்யமுடியும்.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனமானது, ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான சீரான தரம், சுவை, சத்துக்கள் நிறைந்து காணப்படும். கல், மண், தூசி, பூச்சி மருந்துகள் ஆகியவை இல்லாமல் இருக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 800 முதல் 1000 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்.
பயன்படுத்தும் விதைகள்
நன்றாகக் காய்ந்த மக்காச்சோளம், சோளம், கம்பு, கோதுமை, பார்லி, ஓட்ஸ், கேழ்வரகு, காராமணி ஆகிய பயிர் விதைகளாக இருக்க வேண்டும். நன்றாக முளைப்புத் திறன் உள்ள விதைகளாகவும் இருக்க வேண்டும்.


உற்பத்தி முறை
20-க்கு 15 அடி அளவுள்ள எளிமையான பசுமையான நிழல் வலை குடில் (பசுமைக்குடில்) அமைத்துக் கொள்ளலாம். இந்த குடிலில் மரம், இரும்பு தகடால் ஆன சாரம் வைத்து ரேக் அமைத்துக் கொள்ள வேண்டும். நிழல்வலை குடிலின் வெப்பநிலை 24 முதல் 27 டிகிரி செல்சியல், ஈரப்பதம் 80 முதல் 90 சதவீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். முளை கட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி, ரேக்கில் அடுக்கி வைத்து விடலாம். தினமும் ஐந்தாறு முறை பூவாளி கொண்டோ அல்லது சிறிய நுண் நீர் தெளிப்பான் கொண்டோ, நீர் தெளிக்க வேண்டும்.
8 நாள்களில் 15 முதல் 20 செ.மீ. அளவுக்கு பசுந்தீவனம் வளர்ந்து விடும். இந்த பசுந்தீவன புற்களை வேரோடு எடுத்து கால்நடைகளுக்கு கொடுக்கலாம். 300 சதுர அடிப் பரப்பளவில், 500 முதல் 600 கிலோ பசுந்தீவனம் தினமும் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ மக்காச்சோளத்துக்கு 6 முதல் 7 கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம்..

Wednesday, May 22, 2019

Axe Oil கோடாரி தைலம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Axe Oil கோடாரி தைலம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கோடாரி தைலம் இந்த பெயரை தெரியாமல் இலங்கை மற்றும் தமிழகத்தில் இது இல்லாத வீடு இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு பெயர் பெற்றது.வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் இதை வாங்காமல் வர மாட்டார்கள்.

தலைவலியா உடனே இந்த தைலம் தான் நினைவுக்கு வரும் பெரியவர்களுக்கு . 1928 ம் ஆண்டு அதன் நிறுவனர் Leung Yun Chee சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிப்பெயர்ந்தார்.

Leung மேலாளராக Shanghai silk trading நிறுவனத்தில் வேலை செய்தார், மூன்று வருடங்களுக்கு பிறகு சொந்த நிறுவனம் தொடங்க முடிவு செய்தார். அப்போது ஜெர்மானிய மருத்துவர் Dr.Schmeidler என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

அவர் கொடுத்த தைல குறிப்புகளை கொண்டே Axe Oil நிறுவனம் தொடங்க காரணமாக இருந்தது. 1930ம் ஆண்டு இந்த தைலம் அனைவராலும் அங்கீகரிக்கப்படவில்லை.

ஹாங்காங் மற்றும் சீனா நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டிருந்தது. அப்போது தன்னுடை தைலத்தின் Logo வை மாற்றினார். பிறகு துண்டு சீட்டின் மூலம் தைலத்தின் பயன்களை விவரித்து சிங்கப்பூர் முழுவதும் விநியோகம் செய்தார்.

1950-1970 சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் ஹஜ் புனித பயணம் செய்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைவலி, மயக்கம், பூச்சுக்கடி போன்றவற்றிற்கு அதிகம் பேர் பயன்படுத்தினார்கள்.

இதன் விளைவாக வியாபாரம் அதிகரித்தது. இவருடைய முதல் வெளிநாட்டு சந்தை சவூதி அரேபியாவாக இருந்தது. 1971 ஆண்டு நிறுவனர் இறந்தபின் அவருடைய மூத்தமகன் பொறுப்பேற்றார். இன்று ஆசியாவில் சிறந்த தைலமாகவும். சிங்கப்பூரின் Heritage Brand in Singapore, ஆகவும் இருக்கிறது.

பசிக்கு இலவசமாக உணவு தரும் ஹோட்டல் ! குவியும் மக்கள் கூட்டம்

பசிக்கு இலவசமாக உணவு தரும் ஹோட்டல் ! குவியும் மக்கள் கூட்டம்

அமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் மக்கள் எவரேனும் பசிக்கிறது என்றால் இலவசமாக உணவு தருவது அங்குள்ள மக்களுக்குப் பெரும் ஆச்சிர்யத்தை ஏற்படுத்தியுள்ளது 

நம்மூரில் உள்ள ஹோட்டலில்  ’கையில் காசு வாயில் தோச’ என்றுதான் வழக்கம் உண்டு. ஆனால் அமெரிக்காவில் வித்தியாசமான சம்பவம் நடந்துவருகிறது.

அதாவது, அமெரிக்காவில் வெள்ளை மாளிக்கைக்கு அருகில் உள்ள பகுதியில் சகீனா ஹலால் கிரில் என்ற விடுதியுள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் கசி மன்னராவர்.

இவரது விடுதி கடந்த 2013 ஆம் ஆண்டில் ஹோட்டல் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து பசிக்கிறது சாப்பாடு வேண்டும் யார் கேட்டாலும் சப்பாடு வழங்கப்படுகிறது.

மேலும் இந்த ஹோட்டலுக்குள் நுழைந்து காசு கொடுத்து சாப்பிடுபவர்களுக்கு உண்டான அதே மதிப்புதான்  பசிக்கு இலவசமாக உணவு சாப்பிடுபவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கசி மன்னர் கூறியதாவது :

’பாகிஸ்தான் தேசத்தில் பிறந்தவன் நான். சிறுவயதில் ஏழ்மையில் தவித்தேன். அந்தப் பசியும் கொடூரமும் எனக்குத்தெரியும். நான் அமெரிக்காவில் வந்து தங்கி மேன்மையான நிலைக்கு வந்ததும் பல மக்கள் பசியால் இருப்பதை அறிந்தேன். அவர்களுக்கு ஆதரவாக தற்போது  இந்த விடுதியில் உணவளித்து வருகிறேன் ’என்று தெரிவித்தார். இது பலராலும் பாரட்டுப் பெற்றுவருகிறது.

Tuesday, May 21, 2019

சமோசா சாப்பிட்டால் சிறை - ஆச்சர்யமூட்டும் சுவாரஸ்ய உண்மைகள்..!

சமோசா சாப்பிட்டால் சிறை - ஆச்சர்யமூட்டும் சுவாரஸ்ய உண்மைகள்..!


சாப்பாடு மீது அதீத காதல் எல்லோருக்கும் இருக்கும். எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய கால கட்டத்தில் எல்லோருக்குமே உள்ளது தான்.

நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடவது நமது அடிப்படை உரிமை, அது தான் நியாமான சுதந்திரம் கூட. 

ஆனால், உலக அளவில் சில நாடுகளில் இந்த உணவை சாப்பிட கூடாது என்கிற மோசமான வரையறைகள் உள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகள் மூட நம்பிக்கையின் பெயர்களிலும், ஆரோக்கியமற்ற உணவுகள் என்பதன் அடிப்படையிலும் சில நாடுகளில் பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டே உள்ளது.

இதே போன்று தான் சோமாலியா நாட்டிலும் இந்தியாவின் பாரம்பரிய உணவான சமோசாவும் தடை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான உண்மை காரணத்தை தெரிந்து கொண்டால் நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். 

ஏன் சோமாலியா நாட்டில் சமோசாவை தடை செய்துள்ளனர்? இதன் பின் இருக்கும் உண்மை காரணம் என்ன? வேறு எந்தெந்த நாடுகளில் இது போன்ற தடை செய்யப்பட்ட உணவுகள் உள்ளது. முதலிய பல சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

சமோசா

சோமாலியா நாட்டில் சமோசா விற்பதும், சாப்பிடுவதும் மிக பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு மதத்தின் அடிப்படையில் தான் தடை செய்யப்பட்டுள்ளது. சோமாலியா நாட்டில் இந்த முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குறிப்பதால் இதை 2011 ஆம் ஆண்டு முதல் தடை செய்து வருகின்றனர்.

பால்

அமெரிக்கா போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்படாத பாலை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பச்சை பாலை அங்கு விற்க கூடாது என சுமார் 22 மாகாணங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தக்காளி

சாஸ் பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடும் போது டொமட்டோ சாஸ் தான். ஆனால், இந்த நிலை தான் பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 2011 ஆம் ஆண்டு முதல் அங்கு படிக்கும் போது பள்ளி குழந்தைகள் இந்த தக்காளி சாஸை பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு மூல காரணம் குழந்தைகளுக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்பதால் மட்டுமே.

குதிரை இறைச்சி

லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் குதிரை இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிரையை கொல்வதும் அதன் இறைச்சியை விற்பதும், வாங்குவதும் மிக பெரிய அளவில் குற்றமாக கருதப்படுகிறது.

சுவிங்கம்

சிங்கப்பூரில் சுவிங் கம் சாப்பிடுவது ஒரு குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இதை விற்கவும் வாங்கவும் மிக பெரிய அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டு முதல் இந்த தடை நீடித்து வருகிறது.

Saturday, May 18, 2019

ரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்

ரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்

ஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞானி ஜோசினோரி ஓஸ்மி ஓட்டஃபாகோனி என்ற திட்டத்தை கண்டுபிடித்தார். ஆர்வம் மற்றும் பசி காலத்தின்போது நடக்கும் துப்புரவு. தூய்மையான மரபணு மாற்றங்கள், புற்றுநோய் மற்றும் வேற்று நோய்கள் பசியாக இருக்கின்றன. அவர்கள் குணமடைந்திருப்பதைக் காணலாம். ஜப்பானிய அறிஞர் உணவு மற்றும் குடிக்காமல் தங்கி விடுகின்ற தனது ஆய்வுகளை உறுதிசெய்துள்ளார். 

நரம்பியல் நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சையில் உதவி. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றது. மூன்று நாட்களுக்குப் பிறகு நோயெதிர்ப்பு மண்டலம் புதுப்பித்தலுக்கு வழிவகுத்ததாக Yeniakit.Ohsum தெரிவித்தது. முஸ்லிம்களின் உபவாசம் மிகவும் பொருத்தமானது என்று இது உறுதிப்படுத்தியுள்ளது. செல்கள் ஒத்திருக்கவில்லை என்றாலும், அவற்றின் செயல்கள் அவற்றுக்கு உண்டு. அவர்கள் சிறப்பு பையில் தங்கள் மறைவை பூர்த்தி (otofagozomet), பின்னர் கொள்கலன்கள் அவற்றை ஏற்ற. அவர்களில் சிலர் அழிக்கப்பட்டனர், சிலர் மறுசுழற்சி செய்யப்படுகிறார்கள்.

எனவே இது வயது முதிர்ந்த வயதில் விளைந்தது. உண்ணாவிரதம், பசி, மன அழுத்தம் ஆகியவற்றின் போது கட்டம் இன்னும் செயல்படுத்தப்படுகிறது. இந்த செல் மூலம், அதன் ஆற்றலை அதன் சொந்த வாய்ப்பாக கொண்டு தயாரிக்க தொடங்குகிறது. அதன் கழிவு மற்றும் நோய்க்கிருமி பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துதல் மற்றும் தோண்டுவது தொடங்குகிறது. மற்ற விஞ்ஞானிகளுள் ஜோசினோரி ஓஸ்மிமி கூறுகையில், இந்த ஆட்சியைத் தொடர ஒரு மாதம் இல்லாமல், முடிவுகள் கண்கொள்ளாத்தனமாக உள்ளன. நோய்களுக்கு எதிராக போராடும் உணவு மற்றும் பானம் ஆகியவற்றிலிருந்து விலகி இந்த ஆட்சி இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதியாகும்.

Thursday, May 16, 2019

வயது செல்லச் செல்ல நிலவிலும் சுருக்கம் வரும்

வயது செல்லச் செல்ல நிலவிலும் சுருக்கம் வரும்

நாஸாவின் புதிய கண்டுபிடிப்பு

நாம் ஆசை ஆசையாய் பார்த்து வர்ணித்த, கவிதை தீட்டிய நிலவு சுருங்க ஆரம்பித்து விட்டது என்பது உண்மைதான் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள்.
நிலவை காதலியின் முகத்தோடு ஒப்பிட்டு கவிதை புனைந்தனர் நமது கவிஞர்கள். ஆனால் காதலிக்கும் வயதானால் முகத்தில் சுருக்கங்கள் வரும். அப்படித்தான், நிலவிற்கும் இப்போது சுருக்கங்கள் வந்துவிட்டது.
இந்த சுருக்கங்களுக்குக் காரணம், நிலவு சிறிதாகிக் கொண்டே போவதுதான். நிலவு மெலிந்து செல்வதால், அதன் மேற்பரப்பு உடைந்து, பாறை முறிவுகள் ஏற்பட்டு, அவை கோடுகளாக உருமாறி தென்பட ஆரம்பித்துள்ளது. இவை ஒன்றோடொன்று மோதும் தன்மை கொண்டவை என்பது அச்சுறுத்தும் தகவலாகும். கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவு 150 அடி அளவுக்கு சுருங்கியுள்ளது.இப்படி நிலவு சுருங்கிக் கொண்டே செல்லக் காரணம் என்ன என்பதையும் நாசா விளக்கியுள்ளது.
நிலவின் உட்பகுதி குளிர்ச்சையடைவதுதான், இந்த நிலைமைக்கு காரணம். குளிர்ச்சியடையும் பொருள் சுருங்கும் என்பது பௌதிகவியல் விதி என்பது அனைவரும் அறிந்ததுதான்.விண்ணியல் ஆய்வாளர்கள் கடந்த கால ஆய்வு திட்டங்களின் போது, நிலவில் சீசோமீட்டர்களைப் பொருத்தினர். அதில், நிலவில் நிலநடுக்கம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இதை moonquake என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
விஞ்ஞானி தாம் ​ேவாட்டர்ஸ் கூறுகையில், "நிலவு தொடர்ச்சியாக குளிர்சியடைவதாலும், சுருங்குவதாலும் நிலவில் அதிர்வு ஏற்படும் என்பதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளோம்.
இந்த விஷயத்தில் இந்த ஆய்வுதான், முதல் ஆதாரம்" என்று தெரிவித்துள்ளார்.நிலவில் ஏற்படும் நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 5 என்ற அளவுக்கு வலிமையானதாக இருக்கும் என கணித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
மேலும், நிலவு சுருங்குவது தொடர்பாக ஒரு வீடியோவை ட்விட்டரில் நாசா ஷேர் செய்துள்ளது. சமீபத்தில் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளையை புகைப்பட ஆதாரமாக வெளியிட்டு ஆச்சரியத்தில் மூழ்கடித்த நாசா அமைப்பின் அடுத்த முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது.

Wednesday, May 15, 2019

123 வயதில் இயற்கை எய்திய உலகின் வயது மிகு மனிதர்

123 வயதில் இயற்கை எய்திய உலகின் வயது மிகு மனிதர்

ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் என்பவரே அதிக வயதில் வாழ்ந்து வந்த நிலையில், இயற்கை எய்தியுள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், 1896ம் ஆண்டு பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள ஜார்ஜியாவின் அருகில் உள்ள இங்குஷெஸியா என்ற இடத்தில் இவர் வசித்து வந்துள்ளார்.

சுமார் 123 ஆண்டுகள் அவர் உயிரோடு இருந்தமைக்கான காரணம் அவரது உணவு முறைகள் என்று கூறப்படுகின்றது.

தினமும் பச்சை காய்கறிகள், பசும்பால் ஆகியவற்றை உணவிற்காக எடுப்பதாக கூறப்படுகின்றது.

இதைவிட இன்னும் சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒவ்வொரு நாளும் சுமார் 11 மணி நேரம் இவர் உறங்குவார் என்று கூறுகிறார்கள். அத்துடன், அவரது வாழ்நாளில் வைத்தியசாலைக் கு சென்றதே இல்லை என்று கூறப்படுகின்றது.

இதனிடையே, 2ம் உலகப்போரில் பங்கேற்ற அப்பாஸின் வயது 123 என இங்குஷெஸியா நகர நிர்வாக சான்றிதழில் தெரியவந்துள்ளது. அத்துடன், கடந்த 1917 முதல் 1922 வரை ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, May 12, 2019

வாள்களும், இலங்கை முஸ்லிம் வாழ்தலும்..!!

வாள்களும், இலங்கை முஸ்லிம் வாழ்தலும்..!!

அண்மைக்காலமாக முஸ்லிம்பள்ளிவாசல்களில் கூரிய ஆயுதங்கள் ,குறிப்பாக வாள்கள் இருந்தமை பற்றி  பல்வேறு கருத்துக்களும், கண்டனங்களும் நிலவுகின்றன, அதுபற்றிய பதிவே இதுவாகும்,

#வாள்கள்_ஏன், ?

வாள் எனும் கூரிய ஆயுதம்   புராதன காலத்தில் யுத்தங்களில் பயன்படுத்தப்பட்டதுடன், இவை மன்னராட்சிக்கால கௌரவ அடையாளங்களாகவும் இன்றும் அவர்களது பரம்பரையினராலும், நாடுகளாலும் பாதுகாக்கப்படுகின்றது, இதன்படி அரேபிய நாடுகளில் மாத்திரமல்ல, மேலைத்தேய நாடுகளிலும் அவை ஒரு பாரம்பரியமாகவே உள்ளது,

#வாள்களும்_வன்முறையும்

உலகில் ,துப்பாக்கிப் பாவனை கண்டு பிடிக்கப்பட்ட பின்னர், இந்த வாள்களுடனான போர்த்தொடர்பு இல்லாமல்ஆகிவிட்டது எனலாம், ஆனாலும், ஒரு சில இடங்களில், தற்காப்புக்காகவும், தனிப்பட்ட நோக்கிலும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

#முஸ்லிம்களும்_வாளும்,

உலகில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட சமயம் என்ற ஒரு மேலைத்தேய புனைவுக்  கருத்து உண்டு,  இருந்தாலும்,அதுவே, அதன்பலமாகவும், பலவீனமாகவும் கருதப்படுவதுண்டு, கலீபாக்களின் காலத்திலும், இஸ்லாமிய ஆட்சியிலும், வாள்களின் கீழ் அநீதி இழைக்கப்பட்ட மக்கள் பாதுகாக்கப்பட்ட பல வரலாறுகள் உள்ளன, அதாவது வாள் நீதியை நிலை நாட்டும் சின்னமாகவும் மக்களால் கருதப்படுவதுண்டு, மன்னர் கால,இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க அன்னியப் படைகளுடன்  வாளால் போரிட்டு தேசத்திற்காக உயிர்துறந்த பல முஸ்லிம் படைத் தளபதிகளையும், வீர்ர்களையும் வரலாற்றில் காண முடியும், அந்தவகையில் தமது பாதுகாப்பிற்கான கருவியாக  முஸ்லிம்கள் வாளை கருதுவதுடன் அதன் மூலம் நீதி கிடைக்கும் எனவும் நம்புகின்றனர்.

#தேசியக்கொடியில்_வாளேந்திய_சிங்கம்,

இலங்கையின் தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கம் உள்ளது, வாள்  இந்நாட்டின் "இறையாண்மையை"க்  குறிக்கும் அடையாளமாக உள்ளது, இந்த வாள் சின்னம் இலங்கைக்கொடியில் உள்ளடக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு, மட்டுமல்ல இந்த வாள் தேசியக்கொடியில் இன்று இடம் பெற்றிருப்பதற்கு காரணம் முஸ்லிம்களே என்பதே வரலாறாகும்,

#முஸ்லிம்_பங்களிப்பு,

இலங்கை சுதந்திரமடைந்தபின்னர், அதற்கான தேசியக்கொடியாக விஜயனின் வரலாற்றுடன் தொடர்புடைய வாளேந்திய சிங்கக் கொடியை அங்கிகரிக்கக்கோரி பிரதமர்DS சேனநாயக்க   அவர்களினால் 16 January 1948 ல் ஒரு பிரேரணை கொண்டு வரப்பட்டது,  அதனை துணிந்து  முன்மொழிந்தவர் அக்கால Batticaloe பாராளுமன்ற உறுப்பினர் A சின்னலெப்பை அவர்கள் ஆகும்,,  அதனை A.E Gonesinghe ஆமோதித்தார்,

#தமிழர்_பிரதி்நிதிகள்_எதிர்ப்பு

 குறித்த சிங்கக் கொடியையும், வாளையும், ஏற்க முடியாது என காங்கேசன்துறை MP, SJV செல்வநாயகம், வட்டுக்கோட்டை MP, கனகரத்தினம் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்,

ஆனாலும்  வாளேந்திய சிங்கக்  கொடியை ஆதரித்து அன்று சின்னலெப்பை அவர்கள் மிகத் துணிவான கருத்துக்களை முன்வைத்தார் , அதில் முஸ்லிம்களும் வாளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார்,
இந்த வாளின் மூலமான இறைமையை முஸ்லிம்கள் நம்புகின்றனர், என்றும் அது  சிறுபான்மையினரை பாதுகாக்கும் எனவும் தெரிவித்தார், அவரது உரை இலங்கை வரலாற்றில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது,

#ஆணைக்குழு_அங்கிகாரம்,

குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அன்றைய பிரதமரால் ஒரு குழு நியமிக்கப்பட்டது, அதில்

1). SWRD பண்டாரநாயக்க ( தலைவர்),
சேர் ஜோன் கொத்தலாவல,
ஜே,ஆர், ஜயவர்டன,
கலாநிதி,டீ.பி, ஜாயா,
கலாநிதி ,LA ராஜபக்‌ஷ,
ஜி்ஜி். பொன்னம்பலம்,
செனட்டர் எஸ் நடேசன்,
கலாநிதி செனரத் பரணவிதாரண,
போன்றோர் அங்கம் வகித்தனர்,

குறித்த குழுவில் சிங்கத்திற்கும், வாளுக்கும் தமிழ்பிரதிநிதிகள் மீண்டும்  எதிர்ப்பு தெரிவித்தனர், குறிப்பாக செனட்டர் நடேசன் பூரணமாக எதிர்த்ததோடு இறுதி அறிக்கையில் ஒப்பமிடவும் மறுத்தார், ஆனால் முஸ்லிம் பிரதிநிதியான  கலாநிதி ஜாயா அவர்கள்  அதனை சிங்களவர்களுடன் இணைந்து ஆதரித்து அறிக்கை வெற்றி அடைய பங்காற்றினார், 

இது இலங்கையின் தேசியக் கொடியில்  வாளேந்திய சிங்கத்தை பாதுகாக்க முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்த இரண்டாவது தருணம்

இதுபற்றி Carol Aloysius எழுதிய The Srilankan Lion flag how it  came  to be எனரற கட்டுரையிலும், HM . Herath எழுதிய National Flag and National Anthem of Srilanka, Walter Wijayanayakka எழுதிய Srilanka 's National flag,Part of Constitution, போன்ற கட்டுரைகளிலும் காண முடியும், அத்தோடு மறைந்த முஸ்லிம் தலைவரான கலாநிதி அஷ்ரஃப்  அவர்கள் சோம  ஹாமதுருவுடனான விவாதத்தின் போதும் இந்த விடயத்தை இலங்கை முஸ்லிம்களின் நாட்டுக்கான அர்ப்பணிப்பாகவும் குறிப்பிட்டுள்ளார்

அந்தவகையில் இந்த தேசத்தின் அடையாளமாக சிங்கமும், அதன்வாளும் அமைந்ததிலும், அவை பற்றிய வரலாற்றிலும் முஸ்லிம்கள் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், வாளை  தமது வாழ்வியல்  கலாசார  சின்னமாகவும் கருதி வந்துள்ளனர் 

#இன்றைய_நிலை,

இலங்கையில் 21:04:2019 அன்று இடம்பெற்ற வஹாபிய தௌகீத் பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் நாட்டில் உள்ள 2500  பள்ளிவாசல்களில் இரண்டு பள்ளிவாசல்களில் மட்டுமே, வாள்கள் கண்டு பிடிக்கப்பட்டமை ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவும், அச்சமான விடயமாகவும் ஏனையோர்களால் நோக்கப்படுகின்றது

 ஆனால்  அவை தற்காப்புக்கான ஆயுதங்களாகவே அவ் இடங்களில் உள்ளவர்களால்  வைக்கப்பட்டிருக்கின்றன,என்பதே உண்மை.

இலங்கையில் வாள்கள் வைத்திருப்பது தொடர்பில்  சட்டத் தெளிவு இல்லாத அதேவேளை, கடந்த வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளில் முஸ்லிம்களின் உயிர்களும், பொருளாதாரமும், குறிப்பாக பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டமையினாலும், தம்மைத் தாக்க வருபவர்களிடம் இருந்து தம்மைப்பாதுகாக்கும்  என்ற நோக்கில்  இவை வைத்திருக்கப்பட்டிருக்கலாம் என்பதே இதன் உண்மையான மதிப்பீடாகும் ,

#தீர்வுகள்,

குறித்த அளுத்கமை, காலி, திகணை, கலவரங்களில்  ஒரு இறைமை உள்ள அரசு என்றவகையில் தமது பிரசைகளான முஸ்லிம்களை சரியான முறையில் பாதுகாக்கத் தவறியமையும் ,குறித்த நபர்களை தமது தற்பாதுகாப்பை தமது கரங்களில் எடுக்கத் தூண்டி இருக்கலாம், இதனையே பீல்ட்மார்ஷல் பொன்ஷேகா அவர்களின் கூற்றும் உறுதிப்படுத்துகின்றது,

அந்தவகையில் முஸ்லிம் பள்ளிகளில் இருந்த்தாக கூறப்படும் வாள்களால் இதுவரை யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை,, அதனைப் பற்றி வீண் விமர்சனங்களையும் ,அச்சத்தையும் போதிப்பதன் மூலம் ஒரு சமூகத்தை உளவியல் ரீதியாக குற்றவாளிகளாக்குவதை ஊடகங்களும், ஏனையோரும் நிறுத்துவதுடன், முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத்தலைவர்கள் இதுபற்றி தமது உண்மை நிலையை அச்சமின்றி தெளிவாக ஒரே குரலில்  கூற வேண்டும்,

கடந்த காலங்களில் அரசுகள் முஸ்லிம்களை சரியாகப் பாதுகாத்திருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்ல, இந்நிலை தொடராமல் இருக்க இப்போதாவது அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், முயற்சிக்க வேண்டும், மாறாக இது தொடர்பான வீணான செய்திகளையும், வியாக்கியானங்களையும் கூறுவது இருக்கின்ற நிலையை இன்னும் சிக்கலடையவே செய்யலாம்,

எனவேதான், முஸ்லிம் சமூகம், ஒரு சில பயங்கரவாதிகளின் செயலைக்  கண்டிக்கும் அதேவேளை , இந்நாட்டிற்கு நாம் பல நூற்றாண்டுகள் செய்துள்ள அர்ப்பணிப்பையும் நினைவில் கொண்டு உளவியல்ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு உறுதியான சமூகமாக திரும்பவும்  மீண்டெழுவோம், .. இத்தேசத்தை உலகளவில் உயர்த்த முஸ்லிம்கள்  என்ற வகையில் எமது பூரண ஒத்தழைப்பை என்றும்  வழங்குவோம்,

MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA.
12:05:2019
 நாம் ஏன் ஹபாயாவைக் கழட்டி, கையில் கொண்டுபோக வேண்டும்? தாடியை ஏன், வழிக்க வேண்டும்..?

நாம் ஏன் ஹபாயாவைக் கழட்டி, கையில் கொண்டுபோக வேண்டும்? தாடியை ஏன், வழிக்க வேண்டும்..?

பயங்கரவாத_தடைச்சட்டம் / அவசரகாலச்_சட்டம்

நம் நிம்மதியை உறுதிப்படுத்துவதற்கானது நடைமுறைப்படுத்தப்படுவதற்கானது...

நம் நாட்டின் அமைதியை அமுல்படுத்துவதற்காறது...

நம் நாடட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கானது...

நம் நாட்டில் சமாதானம், அமைதி, சகவாழ்வைக் கட்டி எழுப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டிருப்பது...

மொத்தத்தில்

நம் பாதுகாப்புக்கானது

தீவிரவாதத்திற்கு எதினானது

அதைக் கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும்?
நாம் ஏன் ஒடி ஒழிய வேண்டும்?
நாம் ஏன் கூனிக் குறுக வேண்டும்?
நாம் ஏன் எமது அன்றாட செற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்?

நாம் ஏன் ஹபாயாவைக் கழட்டிக் கையில் கொண்டுபோக வேண்டும்?

நாம் ஏன் தாடியை வழிக்க வேண்டும்?

நாம் ஏன் நமது நாட்டு சட்டம் அனுமதித்த நமது உரிமைகளையும் சுதந்திரத்தையும் தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும்?

நாம் பயரங்கரவாதிகளுமல்ல தனி நாட்டுக் கோஷம் எழுப்பி அப்பாவி உயிர்களைக் கொண்றவர்களுமல்ல

தசாப்தங்கள்தாண்டியும் நாட்டின் அமைதியை சீர்குலைத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுமல்ல

பயங்கரவாதத்தையும் மனிதப்படுகொலைகளையும் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ ஆதரித்தவர்களுமல்ல ஆதரிக்கப்போகின்றவர்களுமல்ல.

நாட்டின் இறைமையைக் கேள்விக்துறியாக்கி எம் தாய் நாட்டைக் கூறூ போட்டு பங்குகேட்டு
நம் நாட்டின் வளங்களை நாசப்படுத்தி
பொருளாதாரத்தை வீழவைத்து.. சகவாழ்வை சீர்குலைத்து..
அமைதியை அழித்து...
நின்மதியை_ நிர்கதியாக்கி..
அப்பாவிகளைக் கொன்றுகுவித்து...
பொது இடங்களில் குண்டுவைத்துக் குதூகலித்த பயங்கரவாதிகளுமல்ல...

இன்றுவரை மனசாட்சியே இல்லாமல் மனித மிருகங்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மாவீரர்தினம் கொண்டாடும் ஈனப்பிறவிகளுமல்ல..

அத்துனையும் செய்துவிட்டு புணர்வாழ்வு பெற்று கருத்துச் சுதந்திரம் என்றபெயரில் விஷம் கக்கி இனவாதம் தூண்டும் மனித மிருகங்களும் இந்நாட்டில் நின்மதியாய் வாழும் அளவுக்கு பாதுகாப்புப் படையில் சேர்ந்து உயிர்தியாகம் செய்து நாட்டின் அமைதிக்காய் முழுமூச்சாய் உழைத்தவர்கள்...

நாம் ஏன் தினம் தினம் பயந்து நடுங்கி சாக வேண்டும்?

நாம் முஸ்லிம்கள்

என்றும் அமைதியையும் சமாதானத்தையும் விரும்புவர்கள்

பயங்கரவாதத்திற்கும் மனிதப்படுகொலைக்கும் எதினானவர்கள்

இனங்களுக்குடையிலான சக வாழ்வைக் கட்டி எழுப்பி நாட்டில் அமைதியை உருவாக்கத் துடிப்பவர்கள்

தீவிரவாதிகளையும் நம் நாட்டின் தேசத்துரோகிகளையும் ஐந்து - பத்து நாட்களுக்கு அடக்கி ஒடுக்கிவிட அரசுக்கு துணையாகநின்று துணிந்து செயற்பட்டவர்கள்... பாதுகாப்புப் படையினருக்கு பக்க பலமாக நின்று காட்டிக் கொடுத்தவர்கள்...

சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் சரிந்து போயுள்ள சமாதானத்தையும் 
நம் தேசத்தின் அமைதியையும் மீளக் கட்டியெழுப்ப முழு மூச்சாய் உழைத்துக் கொண்டிருப்பவர்கள்..
நாம் ஏன் அஞ்சவேண்டும்?
இந்த சட்டம் நமக்கானது, நம் பாதுகாப்புக்கானது....

புரிந்து கொள்வோம் 
அச்சம் தவிர்ப்போம்

அன்றாட வாழ்வை அமைதியாய் கழித்து
ரமழானின் பயன்களை பயன்படுத்திக் கொள்வோம்

இறைதிருப்தி பெற்று ஈருலகும் வெல்வோம் இன்ஷா அல்லாஹ்

ஜெமீல் எம் சஜா (கபூரி)

Wednesday, May 8, 2019

உலகையே திரும்பி பார்க்க வைத்த popcorn வியாபாரி

உலகையே திரும்பி பார்க்க வைத்த popcorn வியாபாரி

பாகிஸ்தானில் popcorn வியாபாரி ஒருவர் விமானம் தயாரித்தமை உலகளவில் பேசப்படும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்கப்படுகின்றது.


அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தபூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான முகமது பயாஸ் என்பவரே இந்தச் செயற்பாட்டை செய்துள்ளார். பயாஸுக்கு விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஆசை சிறுவயது முதற்கொண்டு இருந்து வந்துள்ளது. ஆனால் அவரால் சின்ன வயதிலே தந்தையை பறிகொடுத்த காரணத்தினால், தனது கனவை ஒருபக்கம் வைத்துவிட்டு வேறு தொழிலில் சேர்ந்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

காலப்போக்கில் பகல் முழுவதும் popcorn விற்பனையில் ஈடுபடும் பயாஸ், இரவு நேரங்களில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த இரண்டு வேலைகள் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலமே ஐந்து உடன்பிறப்புகளை கவனித்து வந்துள்ளார். குடும்பத்தை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கவனித்து வந்தாலும் அவரால் தமது விமானப் படையில் சேரும் கனவை புறம் தள்ள முடியவில்லை. இந்நிலையில் அவரே சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்குவது என முடிவெடுத்தார்.

தொடர்ந்து இணையதளங்கள், புத்தகங்கள் மூலம் விமான கட்டமைப்பு குறித்து அறிந்துகொள்ள ஆரம்பித்தார். பின்னர் தான் சேமித்து வைத்திருந்த 50,000 ரூபாய், வங்கி கடன் 50,000 ரூபாய் என 1 லட்சம் ரூபாயில் தனது கனவு விமானத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனக்கு கிடைத்த விலைமலிவான பொருட்களை வைத்து பல நாட்கள் கடின உழைப்பிற்கு பின்னர் தனது கனவு விமானத்தை உருவாக்கினார் பயாஸ்.

பாகிஸ்தானின் குடியரசு தினம் கடந்த மார்ச் 23-ந் திகதி கொண்டாடப்பட்டது. அறைய நாளில் பல மக்கள் முன்னிலையில் இந்த விமானத்தை அவர் சோதிக்க முயன்றார். ஆனால் அதற்கு முன் காவல்துறையினர் அவரை கைது செய்து, விமானத்தை கைப்பற்றினர். மேலும் அவருக்கு 3,000 ரூபாவை அபராதமும் விதித்தனர். பின்னர் நல்லெண்ண அடிப்படியில் அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பின் அந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னர் இவர் உலகம் முழுவதும் பிரபலமானார். இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை அதிகாரிகள் 2 முறை, பயாஸின் வீட்டுக்கு சென்று, அவரது விமானத்தை ஆய்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.