காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரதிவாதங்கள் நடந்தேறி வருகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது உண்மைத் தகவல், இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.
அதாவது,
காலிமுகத்திடலில் சஜித் ஆதரவு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், மற்றும் மனோ கணேசன் ஆகியோருக்கு தலா 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்துள்ளது.
இந்நிலையில் மேற் குறிப்பிட்ட 3 அமைச்சர்களில் ஒருவருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஒரு அரசியல் தரப்பின் ஆதரவாளர்கள் சிலர் குறித்த கூட்டத்தில் சிறுபான்மை அமைச்சர் ஒருவர் உரையாற்றும் போது கூச்சலிட்டு, குழப்புவதுடன் இதன்போது ஹிரு தொலைக்காட்சி அதனை விசேட படமாக்கவும் திட்டமிட்டிருந்துள்ளது.
இதனையடுத்தே 3 அமைச்சர்களும் மேடையில் வைத்தே கலந்துரையாடி, தாம் மூவரும் இந்த கூட்டத்தில் உரையாற்றுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
இதுவே நடந்த உண்மைச் சம்பவமாகும்.

0 comments: