Saturday, June 1, 2019

அரபு மொழி இஸ்லாத்தின் மூல மொழி

உலகில் மொழிக்கும் தீவிரவாதத்திற்கும் சம்பந்தம் இல்லை LTTE தீவிரவாதிகள் தமிழ்தான் பேசினார்கள் அதற்காக தமிழ் மொழியை தடைசெய்வதா?

அரபு மொழி என்பது இஸ்லாத்தின் மூல மொழியாகும், உலகில் வாழும் முஸ்லிம்கள் அரபு மொழியுடன் பின்னிப்பினைந்து வாழுகின்றார்கள் காரணம் குர்ஆனை அரபு மொழியில் படிக்கின்ற போது ஒரு எழுத்திற்கு இத்தனை நன்மை என்று படைத்தவனால் வழங்கப்படுகிறது.

 தாய்மொழி வேறாக இருந்தாலும் இஸ்லாம் பிறந்த குர்ஆன் இறங்கிய தூய மொழி அரபாகும். முஸ்லிம்களின் அத்தனை மத கடமைகளும்  அரபுமொழியிலேயே தங்கியிருக்கிறது. 

தீவிரவாதம் என்பது எந்த மொழியிலும் காணப்படலாம் தீவிரவாதிகளை கண்டுபிடித்து தண்டிப்பதை விட்டுவிட்டு  தீவிரவாதி என்ன மொழி பேசுகிறார் என்று பார்த்து  அம்மொழியை தடைசெய்ய சிந்திப்பது ஆரோக்கியமான சிந்தனையில்லை.  -வஜிர அவர்களின் கருத்து மீள்பரிசிலனை செய்யப்பட வேண்டும்.

👍 Like | 👥 Share | ✍️ Comment
தயவுசெய்து எமது பக்கத்தை like செய்து நண்பர்களுக்கும் share செய்யுங்கள்

Author: verified_user

0 comments: