சட்ட பயிற்சிபொதுச் சேவை என்பது மகத்தானது. கொடிய யுத்த காலத்தில்கூட நம்மவர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து கடமையாற்றியிருக்கின்றார்கள். அப்போது இருந்த மிகச்சிலரே இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய பதவிகளில் இருக்கிறார்கள்.
ஆனால் நமது இளைய தலைமுறை பொலிஸ் அதிகாரிகளாக வருவதற்கு விருப்பம் காட்டாமையானது நமது சமூகத்தின் மிகப்பெரும் குறைபாடே. யுத்தமற்ற இலங்கையில் சிவில் பாதுகாப்புக்காக கனத்த சம்பளத்துடன் கூடிய பொலிஸ் சேவையை எம்மவர் புறக்கணிப்பதானது எதிர்காலத்தில் எமக்கான சிறிய சிறிய பிரட்சனைகளைக் கூட தீர்த்துக்கொள்ள முடியாத நிலையை தோற்றிவிடும்.
கப்பலின் சுக்கானை கொண்ட ஆடையை அணிந்த முஸ்லிம் பெண்ணை அவசரகாலச் சட்டத்தின் கீழும், ஊரடங்கு நேரம் கலகம் புரிந்தவர்களை சாதாரண சட்டத்தின் கீழும் கைது செய்த நிலையையும் கண்டிருக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தில் எம்மவர் எவரேனும் அதிகாரிகளாக உரிய பொலிஸ் நிலையங்களில் இருந்திருப்பின் எழுதப்படும் சட்டங்களுக்காக சில பரிந்துரைகளையேனும் செய்திருக்கலாம் என்பதே எனது வாதமாகும்.
எதிர்கால இலங்கையின் சுபீட்சத்துக்கும் செளஜன்யத்துக்கும் எம்மவர்கள் பொலிஸ் சேவையில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
சிந்திப்பார்களா இளைஞர்கள்?
ஷிபான் BM.

0 comments: