ஸ்மார்ட் ஃபோன் பிரிவில் சந்தையில் முன்னணி வகிக்கும் Samsung அண்மையில் Galaxy A2 Core இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியது. இது ஸ்மார்ட் ஃபோனில் முதல் அனுபவம் பெறும் பயனர்களை இலக்காக கொண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. மெல்லிய மற்றும் வளைந்த வடிவமைப்பைக் கொண்ட Galaxy A2 Core சிறந்த செயற்திறனை வழங்கிட தயாராக உள்ளது.
இளைஞர்களின் தேவையைக் கருத்திற் கொண்டு Galaxy A2 Core ஆனது Android Go Edition உடன் வெளிவருகிறது. அதிக செயற்திறனை வழங்கிட மற்றும் பாவனையாளர் பயன்படுத்திட அதிக இடத்தையும் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான android installation package கள், இலகுரக Operating System மற்றும் நம்பமுடியாத அளவிலான வினைத்திறன் மிக்க RAM என்பவை மேலும் அதிக வேகத்தினையும் சௌகரியத்தினையும் வழங்குகிறது.
1GB RAM மற்றும் 16GB internal storage – உள்ளக ஸ்டோரேஜ் உடனான Galaxy A2 Core தற்போது பாவனையாளருக்கு என்றும் மறவா முதலாவது ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்தினை வழங்கிட தயாராக உள்ளது. பணியிட சூழலுக்கு ஏற்ற வகையிலான வடிவமைப்பு, நீலம், அடர்ந்த சாம்பல் நிறம் என பல அழகிய வர்ணத் தெரிவுகள் மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான விலைகள் என பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
தேசத்தின் அடுத்த தலைமுறையினருக்கான மொபைல் தேவையினை பூர்த்திசெய்ததன் மூலம் Samsung Sri Lanka அண்மையில் SLIM People’s Youth Choice Brand விருதினை தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வென்றது.
முதலாவது ஸ்மார்ட் ஃபோன் அனுபவத்தினை Samsung Galaxy A2 Core உடன் பெற்றுக்கொள்ள Samsung அனைவரையும் அழைக்கிறது. Samsung இன் புத்தம் புதிய Galaxy A2 Core இனை Damro, JKOA, Singer, Singhagiri, Softlogic மற்றும் நாடு முழுதும் உள்ள தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

0 comments: