Friday, May 24, 2019

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் கருத்தடை சத்திரசிகிச்சை விவகாரம் தொடர்பாக Dr. Hemachandra Kumarasamy Iyer அவர்களின் பதிவில் இருந்து...

இது உண்மையாக இருக்க முடியாது.. சத்திரசிகைச்சையின் போது அங்கு நேரடியாக குறைந்தது 4 வைத்திய துறையை சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.. மகப்பேற்று நிபுணர், உதவி வைத்தியர், மயக்கும் வைத்தியர், உதவி தாதி..

இதைவிட மேலும் உதவியாளர்கள் இவர்களுடன் அந்த சத்திரசிகிச்சை அறையினுள் இருப்பார்கள்.. மேலும் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டும் இது சாத்தியம்..4000 பேர்களுக்கு இப்படி செய்வதை கனவிலும்,கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாது..

பொதுவாக விசேட வைத்திய நிபுணர் அங்கு சத்திர சிகிச்சை செய்வது குறைவு.. அவர்களின் உதவி சத்திர சிகிச்சை நிபுணர்கள் தான், அனுபவமுள்ள நிபுனர்களின் மேற்பார்வையின் கீழ் செய்வார்கள்..

எனவே இது முற்று முழுதாக சாத்தியம் அற்ற ஒன்று.. முழுமையாக நிராகரிக்க வேண்டும்..

Author: verified_user

0 comments: