Saturday, May 18, 2019

உங்க உடம்புக்குள்ள இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்ற இதை குடிச்சா போதும்?

இன்று நாம் சுற்றுசூழல் முற்றிலும் மாசடைந்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது சுற்றுசூழலில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கால் நமது உடலின் ஒட்டுமொத்த இயக்கங்களையும் சிதைக்கக்கூடும்.
ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கும், உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதற்கும் சுத்திகரிப்பி முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் உடலை தூய்மைப்படுத்த மிகவும் சிறந்த மற்றும் எளிதான வழி உங்கள் உடலில் நீர்சத்துக்கள் குறையாமல் பார்த்து கொள்வதுதான். முடிந்தளவு நீர் குடிப்பதே உங்கள் உடலில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்றிவிடும்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சைசாறு உங்கள் உடலை சுத்தப்படுத்துவதோடு பல பலன்களையும் தரும். இதன் செய்முறை மற்றும் பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

செய்முறை

இத்தனியா செய்வதற்கு தேவையான பொருட்கள் இரண்டு வெள்ளரிக்காய், ஒரு எலுமிச்சைப்பழம், ஒரு பாட்டில் தண்ணீர், சில ஐஸ்கட்டிகள் மற்றும் சில புதினா இலைகள். வெள்ளரிக்காயை சுத்தமாக கழுவி தோல் சீவிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சையையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
இதனுடன் சில புதினா இலைகளையும் சேர்த்து நீங்கள் தண்ணீர் குடிக்கும் பாட்டிலில் இவை அனைத்தையும் போட்டு விடுங்கள். இதில் தண்ணீரை நிரப்பி ஐஸ்கட்டிகள் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்து விடவும். சிறிது நேரம் கழித்து இதனை எடுத்து நன்கு குலுக்குவிட்டு குடிக்கவும். இதற்கு கண்ணாடி பாட்டில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

எடை குறைப்பு

பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானம் உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கக்கூடும். மேலும் இது உங்கள் பசியை கட்டுப்படுத்தும். பசியெடுக்காத போது நீங்கள் தேவையில்லாத உணவுகளை சாப்பிட்டு எடையை அதிகரித்து கொள்ள மாட்டிர்கள். எடை குறைப்பிற்கும் இந்த பானம் மிகவும் உதவியாக இருக்கும்.

இதய ஆரோக்கியம்

இது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவை தக்கவைப்பதுடன் உடலில் இருக்கும் நச்சுத்தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சையில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். இது உடலில் இருக்கும் நச்சு பொருட்களுடன் சண்டையிடுவதுடன் இதயத்தையும் ஆரோக்யமாக பராமரிக்கிறது.

Author: verified_user

0 comments: