Showing posts with label HEALTH TIPS. Show all posts
Showing posts with label HEALTH TIPS. Show all posts

Sunday, October 13, 2019

மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க…!

மாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா? அப்ப இத செய்யுங்க…!

தற்போது உயர் இரத்த அழுத்தம் பொதுவான பிரச்சனையாக உள்ளது. நிபுணர்களின் படி, ஒருவரது இரத்த அழுத்தத்தை சோதிக்கும் போது, 140/90 ஆக இருந்தால், அது உயர் இரத்த அழுத்தமாக கருதப்படுகிறது. அதாவது ஒருவரது இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக நீண்ட நேரம் அதிகமாக இருந்தால், அது தான் உயர் இரத்த அழுத்தமாகும். இந்த பிரச்சனையைக் கவனித்து ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பல தீவிரமான பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது, உணவில் அதிகமாக உப்பை சேர்ப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பது போன்றவைகள் தான். உயர் இரத்த அழுத்த பிரச்சனையானது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லக்கூடியது. ஏனெனில் இந்த பிரச்சனைக்கான அறிகுறிகளானது அன்றாடம் நாம் சந்திக்கும் உடல் உபாதைகளாக இருக்கும்

மேலும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை இன்று இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கங்களே முக்கிய காரணமாகும். இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. சரி, இப்போது அந்த உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கான அறிகுறிகள் மற்றும் அதை சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை மாத்திரைகளைக் கொண்டு சரிசெய்யலாம். ஆனால் அதே சமயம் இயற்கையாகவும் சரிசெய்ய முடியும் என்பதை மறக்க வேண்டாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையாக சரிசெய்யும் சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி பாருங்கள்.
மக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான சத்தாகும். மக்னீசியம் இரத்த நாளங்களை விரியச் செய்து, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மக்னீசியம் சப்ளிமெண்ட்டுகள் அல்லது மக்னீசியம் நிறைந்த உணவுகளை தொடர்ந்து 2 வாரங்கள் உட்கொண்டு வந்தால், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், சோடியத்தால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளில் இருந்து நிவாரணம் அளித்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மேலும் இந்த கனிமச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்துடன், பொட்டாசியம் நிறைந்த இதர உணவுப் பொருட்களான ஆப்ரிகாட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளையும் சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸ் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதை பல கட்டுரைகளில் பார்த்துள்ளோம். இந்த எலுமிச்சை ஜூஸை ஒருவர் தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதிலும் எலுமிச்சை ஜூஸை காலை உணவிற்கு முன் ஒரு டம்ளர் குடிப்பதால், உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் எலுமிச்சை ஜூஸ் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலை வறட்சியடையாமல் பாதுகாக்கும். மேலும் இது தமனிகளின் சுவர்களுக்கு நன்மையை வழங்கும்.

Wednesday, June 12, 2019

இந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்

இந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், நம் எல்லோருக்குமே தெரியும் ஃபிரிட்ஜ் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனாலும் நமக்கு தெரியும் சில உணவுப் பொருளு்களை .ஃபிரிட்ஜில் வைக்கும்பொழுது, அது அந்த உணவின் சுவையையே வேறுவிதமாக மாற்றிவிடுகிறுது.
சுவையை மட்டும் மாற்றினால் கூட பரவாயில்லலை. சிலவற்றை அதில் இருக்கின்ற ஊட்டச்சத்தின் அளவையும் குறைத்து விடுகிறது. அதனால் சில ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்கள் பிரிட்ஜில் வைக்கும்போது விஷத்தன்மை உடையதாகவும் கூட மாற்றிவிடுகிறது. அப்படி என்னென்ன உணவுப் பொருள்களை பிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
தக்காளி
தக்காளியை பிரிட்ஜில் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், அதன் இயல்பான பொழிவை இழப்பதோடு உள்ளுக்குள் இருக்கும் நீர்ச்சத்துக்கள் முழுக்க உறிஞ்சப்பட்டு வெறும் சதை மட்டுமே சக்கையாக உங்களுக்குக் கிடைக்கும். அதனால் திறந்த ஒரு காய்கறி கூடை அல்லது பாத்திரத்தில் போட்டு, ஜன்னலுக்கு அருகில் வைத்துவிட்டாலே போதும். தக்காளி பிரஷ்ஷாகவும் அதேசமயம் அதிக ஜூஸ் கிடைக்கும்படியும் இருக்கும்.

உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கினை ஃபிரிட்ஜில் வைத்தால், அதில் நிறைந்திருக்கின்ற ஸ்டார்ச் முழுமையாக வெளியேறிவிடும். ஃபிரிட்ஜில் வைத்தபின் எடுத்து சமைத்தீர்கள் என்றால் வெறும் சக்கை தான் மிஞ்சும். அதனால் சாதாரண அறை வெப்பநிலையில் (ரூம் ரெம்பரேச்சர்) ஒரு கூடையிலோ அல்லது நியூஸ் பேப்பர் போட்டு விரித்து வைத்தாலே போதுமானது.

வெங்காயம்
வெங்காயத்தை ஃபிரிட்ஜில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஒரு ரீசீலபிள் கவருக்குள் போட்டு, காய்கறி வைக்கும் டிரேயில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே திறந்தபடி ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள். அதிலுள்ள நீர்ச்சத்து முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு அது மற்ற காய்கறிகளையும் பாதிக்கும். அதைவிடவும் அதிலிருந்து வெளியுறும் கெட்ட நாற்றம் உங்கள் உணவையும் மற்ற உணவுப் பொருளையும் மாற்றி விடும். அதைவிட அதில் விஷயத்தன்மை உண்டாகிவிடும். அதனால் முடிந்தவரை வெங்காயத்தை அறையில் ஒரு மூலையில் காற்று பரவும் இடத்தில் பரப்பி வைத்தாலே போதுமானது. நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

தேன்
நமக்கு இயற்கையாகக் கிடைக்கின்ற உணவுப் பொருள்களில் மிகவும் அற்புதமான ஒன்று தான் தேன். எவ்வளவு நாள் ஆனாலும் தன்னுடைய குணத்திலிருந்தும், சுவையிலிருந்தும் மாறாத ஒன்று என்றால் அது தேன் தான். அதைவிடவும், ஆண்டுக்கணக்கில் வெளியில் அப்படியே வைத்திருந்தாலும் தேன் கெட்டுப் போகாது. அதனால் அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே போதுமானது. ஃபிரிட்ஜில் வைத்தால் உறைய ஆரம்பித்துவிடும்.

பூண்டு
அதிக வெயில் இல்லாத ஓரளவு குளிர்ச்சியான பகுதியில் தான் பூண்டினைப் பாதுகாக்க வேண்டும். பூண்டை ஃபிரிட்ஜில் வைத்தால் இதில் உள்ள சுவை, மணம் மற்றும் மருத்துவ குணம் நீங்கி விடும். அதிலுள்ள காரத்தன்மை முற்றிலும் குறைந்து விடும்.

காபி
பொதுவாக காபி பவுடரை மிக இறுக்கமாக மூடப்பட்ட கண்ணாடி ஜாரில் போட்டு வைப்போம். அப்படி மூடிய பாட்டிலை சிலர் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவார்கள். அது காபி கொட்டையாக இருந்தாலும் சரி பவுடராக இருந்தாலும் அதை ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.

பிரட்
பொதுவாக பேக்கரி தொழிலில் உள்ள நிபுணர்கள் பிரட்டை ஃபிரிட்ஜில் வைப்பது சரியென்று ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குறைந்த வெப்பநிலை கொண்ட இடத்தில் பிரட்டை ஸ்டோர் செய்து வைத்தால், அது நமத்துப் போய்விடும். அதில் உள்ள சுவையும் நீங்கி, சக்கை போல மாறிவிடும்.

ஆப்பிள்
ஆப்பிளைப் பொருத்தவரையில், ரூம் டெம்பரேச்சரில் வைத்திருந்தால் மட்டும் தான், அது இனிப்பாகவும் ஜூஸியாகவும் இருக்கும். ஆப்பிளை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டீர்கள் என்றால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து போவதோடு, அது சக்கை போல மாறிவிடும். நீர்ச்சத்து முழுதும் உறிஞ்சப்பட்டு தோல் வறட்சியடைந்துவிடும்.

Thursday, June 6, 2019

போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா?

போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் என்ன நிகழும் தெரியுமா?

மனித உடலில் பிளாஸ்டிக் துகள்கள்  அதிகமாக ஊடுருவுவதாக, புதிய ஆய்வொன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன. 

உணவு மற்றும் காற்றின் மூலம் மனித உடலை ஊடுருவும் பிளாஸ்டிக் துகள்கள், சமீப காலத்தில் அதிகரித்து காணப்படுவதாக குறித்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவது சுற்றுச் சூழல் தொடர்பில் பெரியளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இந்த ஆண்டில், காற்றின் மாசு குறித்த விழிப்புணர்வை ஐநா மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கனடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், ஆண்டுதோறும் 52,000 நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவி செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களால் உருவாக்கப்படும் சின்தடிக் உடைகள், கார் டயர்கள் மற்றும் கென்டக்ட் லென்சுகள் உள்ளிட்டவற்றில் இருந்து உருவாகும் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள், மனிதர்கள் சாப்பிடும் உணவுகள் மற்றும் சுவாசிக்கும் காற்றின் மூலம் உடலுக்குள் சென்று, பாதிப்பை உருவாக்குவதாக அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காற்று மாசுப்பாடு காரணமாக வருடம் தோறும் 1,21,000 பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்வதாகவும், குறிப்பாக பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்படும் குடிநீரை தொடர்ந்து பருகுவதால் கூடுதலாக 90,000 பிளாஸ்டிக் துகள்கள் நமது உடலை சென்றடைவதாகவும் குறித்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.

ஆயினும் 130 மைக்ரோமீட்டருக்கும் குறைவான இந்த பிளாஸ்டிக் துகள்கள், மனிதனின் திசுக்களில் ஊடுருவி அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் அளவிற்கு மிகவும் அபாயம் மிக்கவை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Friday, May 31, 2019

தாங்க முடியாத குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம்

தாங்க முடியாத குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம்

வயது அதிகரிக்கும் போது, உடலில் பிரச்சனைகளும் அதிகரிக்கும். எப்போது எப்பிரச்சனை ஆரம்பமாகும் என்றே தெரியாது. அப்படி ஆரம்பமாகும் பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வலி. இந்த வலியில் இருந்து விடுபட, பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும், எந்த பலனும் கிடைக்காமல் இருக்கும். 
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் இயற்கை பானத்தின் மூலம், குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். வயது அதிகரிக்கும் குதிகால் வலி வருவதற்கு, பாதங்கள் விரிவடைவது தான் காரணம். இப்படி விரிவடைவதால், குதிகால் எலும்புகளில் அழுத்தம் அதிகரித்து வலியை உண்டாக்குகின்றன.
சரி, இப்போது குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் அற்புத பானம் குறித்து காண்போம்.

  • முதலில் சிறிய அளவிலான இஞ்சியை எடுத்து தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
  • பின்பு துண்டுகளாக்கி வைக்கப்பட்டுள்ள இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு, 5-7 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
  • பிறகு அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • இறுதியில் அதை வடிகட்டி தினமும் 3-4 முறை குடிக்க வேண்டும்.
குறிப்பு
இஞ்சி டீயைக் குடித்து வருவதுடன், தினமும் 2 முறை இஞ்சி எண்ணெயைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், விரைவில் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

Saturday, May 25, 2019

இதய நோய் உங்களுக்கு வரவே வராது! இதை தெடர்ந்து சாப்பிடுங்கள்

இதய நோய் உங்களுக்கு வரவே வராது! இதை தெடர்ந்து சாப்பிடுங்கள்

ஆயுர்வேதத்தின் முக்கிய மருந்துகளாக இருப்பது தேன் மற்றும் இலவங்கப்பட்டை தான். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன, அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நம் மனதையும் அமைதிப்படுத்த இது பயன்படும்.தேனில் குளுக்கோஸ், ஃப்ருக்டோஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. அத்துடன் இரும்புச்சத்து,கால்சியம்,போஸ்பேட்,க்ளோரின்,பொட்டாசியம்,மக்னீசியம்,விட்டமின், பி1,பி2,பி3 ,பி5 மற்றும் பி6 இருக்கிறது. இது மிகச்சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும்.அதே போல இலவங்கப்பட்டையிலும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை இருக்கிறது.இவை இரண்டையும் சேர்த்து எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று பார்க்கலாம். 
தயாரிப்பு முறை :ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும் சேர்த்து குடிக்க வேண்டும். இதனை தண்ணீரில் சேர்க்கலாம் அப்டியே பேஸ்ட் செய்து சாப்பிடலாம்
இருதய நோய்:தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன.
மூட்டு வலி :மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும். 
கொலஸ்ட்ரால்:ஒரு கப் தண்ணீருடன் 2 ஸ்பூன் தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு குறைந்திடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.
ஜலதோஷம்:ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.
நோய் எதிர்ப்பு சக்தி:தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும். 
அஜீரணக் கோளாறு:இரண்டு ஸ்பூன் தேனை எடுத்து பட்டைத்தூளுடன் சேர்த்து சாப்பிட்டு வர அஜீரணக்கோளாறு சரியாகும். அசிடிட்டி இருப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் பட்டைத்தூளை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.
சுருக்கங்கள் :ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், முகத்தில் சுருக்கங்கள் வருவதை தடுக்கிறது.
பரு :3 ஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் பூசி, பதினைந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவிடலாம். இதனை தினமும் செய்து வந்தால் பருக்கள் மறைந்திடும். தழும்பும் மறைந்திடும்.
எடை குறைவு :ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன் குடிக்க வேண்டும்.இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். 
அசதி :தேனில் இயற்கையாய் இருக்கும் இனிப்பு, நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.
முடி உதிர்வு :முடி உதிர்வு மற்றும் வழுக்கை தலையுள்ளவர்கள் சிறிதளவு ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக கலந்து, குளிப்பதற்கு, 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வெது வெதுப்பான நீரில் தலையை கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 


சர்க்கரை நோய் :தேன் மற்றும் பட்டை சர்க்கரை நோய்களுக்கு மிகவும் நல்லது. பட்டையில் இருக்ககூடிய தாதுக்கள் இன்ஸுலின் சுரப்பை துரிதப்படுத்தும்.இதனால் உடலில் குளுக்கோஸ் அளவு சீராக வைத்திருக்க உதவிடும்