பொலன்னறுவை - புலஸ்திபுர பகுதியில் காதலியை பெற்றோல் ஊற்றி எரித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலனறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆடைச் தொழிற் சாலையில் தொழில் புரிந்த யுவதியொருவர் காணமால் போய்வுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அதற்கமைய கடந்த 12 ஆம் திகதி காணமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்ட யுவதியின் என சந்தேகிக்கும் உடற்பாகங்கள் சில எரியூட்டப்பட்ட நிலையில் பொலன்னறுவை - லக்ஷ உயன பிரதேசத்தின் வயல் வெளியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது யுவதியின் முழு உடலுமே எரியுட்டப்பட்டுள்ளதுடன் , எலும்புகள் சிலவே எஞ்சியிருந்தன என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அதே ஆடைச் தொழிற் சாலையில் சேவையாற்றிய, குறித்த பெண்ணின் காதலன் என சந்தேகிக்கும் நபரை கைது செய்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யுவதியின் காதலனான சந்தேக நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன் அவருக்கு ஒரு பிள்ளையும் உள்ளது என யுவதிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யுவதிக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்த சந்தேக நபர் , யுவதியை அழைத்து தனியாக பேசவேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்காக வேலை முடிவுற்றதும் வந்து சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.
யுவதி சந்தேக நபரை கடந்த 10 ஆம் திகதி சந்தித்துள்ளதுடன், இதன் போதே யுவதி சந்தேக நபரால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். பின் யுவதியின் உடலை பெற்றோல் இட்டு சந்தேக நபர் எரித்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments: