அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணையை இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒன்றிணைந்த எதிரணியின் ஆதரவையும் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் ஒன்று தற்போது எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறுகிறது.
இதன்போது, அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
HIRU NEWS

0 comments: