Friday, May 24, 2019

பாடசாலைக்கு அருகில் மீட்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!


பதுரலிய பிரதேசத்தின் பாடசாலையொன்றிற்கு அருகில் கைக்குண்டுகள் சில விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு காவற்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.

குறுகிய இலக்குகளை அடையவும், சமுதாயத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் இந்த குண்டுகள் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

குறித்த குண்டுகளை விட்டுச் சென்ற நபர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர்  இதன்போது தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: