Saturday, May 18, 2019

தனியார் துறை பணியாளர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும்

எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட் கிழமை அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என தனியார்துறை தொழில்தருநர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தொழில் மற்றும் தொழில் உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 
விசாகப் பூரணை தினம் வார இறுதியில் அமைந்துள்ளமையினால், எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறைத் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், குறித்த தினத்தில் தனியார் துறை பணியாளர்களுக்கும் விடுமுறைத் தினமாக சட்டரீதியான அறிவிப்பை வெளியிட முடியாத காரணத்தினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: