Sunday, May 19, 2019

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விரைவில் வௌியிடப்படும் என அறிவிப்பு


2018 - 2019 ஆண்டு பல்கலைக்கழக கல்வி தொடர்பில் மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தமுறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் அடுத்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: