Wednesday, May 22, 2019

அரச மொழித் தினம் மற்றும் அரச மொழி வாரமொன்றினை பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி


அரச மொழித் தினம் மற்றும் அரச மொழி வாரமொன்றினை பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி , ஜூன் மாதம் 3ம் திகதி அரச மொழித் தினமாக பிரகடனப்படுத்தப்படும் நிலையில் , அன்றைய நாள் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அரச மற்றும் அரச சார்பற்ற துறைகளின் முழு ஒத்துழைப்புடன் அரச மொழிக் கொள்கையை செயற்படுத்தும் நோக்கத்துடன் வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படும்.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் , அரச மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் பயன்படுத்தப்படும் நிலையில், ஆங்கிலம் மொழி கூட்டு மொழியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Author: verified_user

0 comments: