கிண்ணியாவில் படையினர் திடீர் சுற்றிவளைப்பொன்றை இன்று மேற்கொண்டுள்ளனர். இராணுவம் உட்பட பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை முதல் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட படையினர் வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் பலத்த பாதுகாப்புடன் சுற்றிவளைப்பு இடம்பெற்று வருகின்றன.
தேசிய அடையாள அட்டை உட்பட வாகனங்கள் மற்றும் கடைகள் போக்குவரத்தின் போதான நடவடிக்கைகள் என்பன தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கிண்ணியா பகுதியில் உள்ள சின்னக் கிண்ணியா, பெரிய கிண்ணியா, பெரியாற்றுமுனை உள்ளிட்ட பல பிரதேசங்களை படையினர் சுற்றிவளைத்துள்ளதுடன் தீவிரமாக சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். உத்தியோகபூர்வமான கைதுகள் எதுவும் இதுவரைக்கும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

0 comments: