வவுனியாவில் - அலகல்ல- அளுத்கம பிரதேசத்தின் வனப்பகுதியொன்றில் இருந்து விமானங்களைத் தாக்கும் 85 குண்டுகளை ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
வவுனியா- ஈரப்பெரியகுளம் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை அலகல்ல மற்றும் அளுத்கம பகுதியிலுள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் , குறித்த பகுதியில் வேறு வெடிப்பொருட்கள் காணப்படாத நிலையில் , மேற்படி வனப்பகுதியில் யுத்தக்காலத்தில் விடுதலை புலிகளின் செயற்பாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் கண்டு பிடிக்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொகை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments: