Sunday, May 26, 2019

மீள் சுழற்சி ஏதும் செய்யாமல் குப்பை மலை புத்தளம் வந்துவிட்டது.

குளியப்பிட்டி பிரதேச சபை முதன் முறையாக தாம் சேகரித்த குப்பைகளை டிப்பர் வாகனத்தில் ஏற்றி புத்தளம் அருவைக்காளு சுண்ணக்குழிகளில் தட்டுவதற்கு அனுப்பி வைத்துள்ளது.

கொழும்பு புத்தளம் பாதையூடாக வந்த குப்பையேற்றிய வாகனம் மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி பொலிஸ் பாதுகாப்புடன் மன்னார் வீதியில் பயணம் மேற்கொண்டு குப்பைகளை தட்டியுள்ளது.

சம்பவத்தை அறிந்த பிரதேசவாசிகளும் வனாத்தவில்லு பிரதேச சபை தலைவர் உறுப்பினர் உள்ளிட்டவர்கள் உடனடியாக விரைந்து சென்று தமது எதிர்ப்பை வெளிக்காட்டி இதற்கு பிறகு தட்டுவதற்கு தாம் அனுமதிக்க போவதில்லை என்றும் முரண்பாட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.

Author: verified_user

0 comments: