மட்டக்களப்பு - வாழைச்சேனை - புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு கெம்பஸ் என்ற கல்வி நிறுவகத்தை அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடியாது என்று கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
குறித்த கல்வி நிறுவனம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவக் குழுவின் உறுப்பினர்கள் இன்று கண்காணிப்புக்காக அந்த கல்வி நிறுவக்கு சென்றிருந்தனர்.
இதன்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய ஹிஸ்புல்லா, தனியார் கல்வி நிறுவனமான மட்டக்களப்பு கெம்பஸை சுவீகரிக்கும் உரிமை அரசாங்கத்திடம் இல்லை என்று குறிப்பிட்டார்.
உயர் கல்வி அமைச்சில் பட்டமளிப்பு நிறுவகத்துக்கான பிரிவில் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானி ஊடாக மட்டக்களப்பு கெம்பஸ் குறித்த அறிவிப்பு வெளியாக்கப்படவில்லை.
அதனால் இதனை அரசாங்கம் சுவீகரிக்க முடியாது.
சைட்டம் அவ்வாறு வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடப்பட்டதன் மூலமே அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடிந்தது என்றும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் மட்டக்களப்பு கெம்பஸ் கல்வி நிறுவகத்தையும் அவ்வாறு வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments: