ஓட்டமாவடி மணிக்கூட்டுக்கோபுர சந்தி தொடக்கம் மீராவோடை - ஓட்டமாவடி வீதி, மீராவோடை பொதுச்சந்தை வீதி, மீராவோடை பாடசாலை வீதி, கறுவாக்கேணி வீதி, எம்.பி.சீ.எஸ். வீதி உட்பட ஹுதா பள்ளிவாயல் வீதி வரையான வீதிகள் அனைத்தும் விஸ்தரிப்புச் செய்து கார்பட் வீதிகளாக புனரமைப்பதற்காக விவசாயம், மீன்பிடி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறிப்பிட்ட வீதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், குடியிருப்பாளர்களுடனான கலந்துரையாடல் இன்று எமது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.ரீ. அமிஸ்டீம் (அஸ்மி) அவர்களின் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி விஸ்தரிப்புப் பணிக்கு இடையூறாக காணப்படும் விளம்பரப் பலகைகள், கூரைகள் என்பவற்றை அப்புறப்படுத்துவதற்கு கடை உரிமையாளர்களால் சம்மதம் தெரிவிக்கப்பட்டதுடன், எமது பிரதேசத்தின் அபிவிருத்தி கருதி வீதி விஸ்தரிப்புப் பணிகளை திருப்திகரமாக செய்து முடிப்பதற்கும் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கவுள்ளதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பிரதேச சபையின் செயலாளர் ஜனாப். எஸ்.எம். சிஹாப்தீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜனாப். எச்.எம்.எம். றுவைத், பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஜனாப். ஏ. அக்பர் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், குடியிருப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.


0 comments: