Saturday, May 11, 2019

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

குருணாகல் பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குருணாகல் வலய குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தனியார் வங்கி ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

இதன்பொது சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 03 பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Author: verified_user

0 comments: