Saturday, May 18, 2019

இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்?????


இன்றைய தினம் சீகிரியாவை பார்வையிட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் , வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 200க்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை வரை சீகிரியாவை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

அதேபோல், சீகிரியாவின் பாதுகாப்பு , காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: