அனுராதபுரம் - பக்கமூன - எலஹெர - குமாரயெல்ல பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களும் காவற்துறை விசேட அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே புதையல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மூன்றரை வருடங்களுக்கு அதிகமாக புதையல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுமார் 60 அடிக்கும் அதிகமான ஆழமுடைய நிலக்கீழ் சுரங்கம் ஒன்று காணப்படுவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உணவு உற்பத்தி நிறுவனமும் மற்றும் குடிநீர் உற்பத்தி நிறுவனம் ஒன்றும் நடாத்தி செல்வதாக தெரிவித்தே இந்த புதையல் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் புதையல் அகழ்விற்காக நிழக்கீழ் சுரங்கம் தோண்டப்பட்ட விதம் மற்றும் குறித்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பிலான காணொளி இதோ...

0 comments: