தரம் குறைந்த தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான சட்ட விதிமுறைகளை பின்பற்ற அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தங்க ஆபரணங்களுக்காக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குதல் மற்றும் குறித்த முத்திரையின்றி தங்க ஆபரணங்களை விற்பனை செய்யும் தங்க ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றிவளைத்து சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி இன்று முற்பகல் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் நிர்வாகக்குழுவுடன் முன்னேற்றம் ஆய்வு கூட்டமொன்றிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: