Wednesday, May 22, 2019

132 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது


மதவாச்சி பிரதேசத்தில் கேரள கஞ்சா தொகையொன்றை சிற்றூர்ந்தில் கடத்திச் சென்ற இருவர் காவற்துறையால் கைது செய்ப்பட்டுள்ளனர்.


கடற்படையால் காவற்துறைக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இதன் போது , சிற்றூர்ந்தில் இருந்து 132 கிலோ கிராமுக்கும் அதிக கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.



50 மற்றும் 51 வயதுடைய சந்தேகநபர்கள் நாளைய தினம் அனுராதபுரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Author: verified_user

0 comments: