ஹட்டன் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம பிரதேசத்தில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த கடும் மழையினால் அப்பகுதியிலுள்ள ஆறு பெருக்கெடுத்ததால் 12 வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது .
இதனால் சில வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளன. இந்நிலையில் அங்கு வசிக்கும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சமையல் அறைகளில் உள்ள பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடவில்லை.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோருக்கான உதவிகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 comments: