Monday, April 29, 2019

சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் புதிய சி.சி.டி.வி காணொளி


உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு - சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி, தாக்குதலுக்கு முன்னர் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டு அங்கிருந்து வெளியேறும், பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள காணொளி பதிவு எமது செய்தி சேவைக்கு கிடைத்துள்ளது.


தாக்குதல் இடம்பெற்ற கடந்த 21 ஆம் திகதி குறித்த நபர், அதிகாலை 3.17 மணி அளவில் மட்டக்களப்பில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்.



எனினும் அவர் அங்கு வரும்போது பள்ளிவாசலின் வாயில் மூடப்பட்டிருந்து.



இதனால் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக அவர் பள்ளிவாசலின் வாயில் அருகில் திறக்கும் வரை காத்திருந்துள்ளார்.



பின்னர் 5.41 மணியளவில் பள்ளிவாசலினுள் இருந்த நபரொருவர் வந்து பள்ளிவாசலின் வாயிலை திறந்த பின்னர் குண்டுதாரி  பள்ளிவாசலுக்குள் நுழைந்துள்ளார்.



அவர் அங்கிருந்து சியோன் தேவாலயம் வரை சென்றுள்ள சி.சி.டி.வி காணொளி எமது செய்தி சேவைக்கு கிடைத்துள்ளது.


Author: verified_user

0 comments: