Monday, April 29, 2019

மே தின கூட்டதை ரத்துச் செய்த கூட்டு எதிர்க்கட்சி!


ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இணைந்து நடாத்த திட்டமிட்டிருந்த மே தின பேரணி மற்றும் கூட்டதை ரத்துச் செய்து மே தினத்தன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது , நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்திருந்தார்.

இதேவேளை , நாட்டின் தற்போயை நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ஷ முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Author: verified_user

0 comments: